19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை–
 அரசியல் பேதங்களை மறந்து 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் உப தலைவர் சாலிய பீரிஸ், இலங்கை அரசியலில் சுபீட்சமான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, சட்டத்தின் ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் சிறந்த ஆட்சிக்காகவும், 19வது அரசியலமைப்பு திருத்தம் அத்தியாவசியமானது என்று சங்கத்தின் உப தலைவர் சாலிய பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு விசேட கல்வி வலயங்களாக பிரகடனம்-
 கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளினது உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படவுள்ளன. அத்துடன், சிவில் பாதுகாப்பு பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை நடத்தப்பட்டு, நேர்முகப் பரீட்சையின் பின்னர் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கதாகும்.

சோமவன்ச அமரசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்-
 எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். மக்களுக்கு விசுவாசமுள்ள அரசாங்கமொன்றை அமைக்கத் தாம் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் மேடைகளில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தார்மீகப் பொறுப்புடைய அரசாங்கத்தை உருவாக்குவதே எமது இலக்காகும். எம்மால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் தலைமைத்துவம் குறித்து எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்மேளனக் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கவுள்ளோம். ஆயினும், நாட்டிலுள்ள பிரதான கட்சிகளுக்கு எந்த வகையிலும் எம்மால் ஸ்தாபிக்கப்படவுள்ள கட்சி ஆதரவு தெரிவிக்காது என்று சோமவன்ச அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்றவர்களுக்கு எலக்ட்ரோனிக் அடையாள அட்டை-
 ஓய்வு பெற்றவர்களுக்கான எலக்ட்ரோனிக் அடையாள அட்டை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அடையாள அட்டைகள் 1960ஆம் ஆண்டிலிருந்து பாவனையில் உள்ளன. ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துவதற்காக, நவீன தொழில்நுட்பத்துடனான புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம், காப்புறுதி தவணைக் கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களை எதிர்காலத்தில் எலக்ட்ரோனிக் அடையாள அட்டையின் மூலம் செலுத்த முடியும் என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வூதியம் மாத்திரமன்றி, விதவைகள் மற்றும் தபுதாரர் கொடுப்பனவுகள் உட்பட சகல நவீன கொடுக்கல் வாங்கல் வசதிகளையும் எலக்ட்ரோனிக் அடையாள அட்டையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வனவாட்டுவுக்கு இலங்கை நிதியுதவி-
 சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வனுவாடு குடியரசுக்கு இலங்கை அரசாங்கம் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான பதில் உயர்ஸ்தானிகர் பி. செல்வராஜ். கென்பராவில் அமைந்துள்ள வனுவாட்டு உயர்ஸ்தானிகரை சந்தித்து இந்நிதிக்கான காசோலையை வழங்கியுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் வழங்கப்பட்ட இந்நிதியுதவியை பாராட்டிய வனுவாட்டு உயர்ஸ்தானிகர் இருநாடுகளுக்கிடையிலான உறவு மேலும் மேம்பட இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவித்திருந்தார். வனுவாட்டுவில் கடந்த மாதம் இடம்பெற்ற வெப்ப மண்டல சூறாவளியில் 90 வீதமான வீடுகள் அழிவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்-
 பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று காலை 07.40 அளவில் இந்தியாவின் கொச்சின் நகர் நோக்கி அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலும் பிரதமருடன் மேலும் சில பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு ரணில் விக்கிரமசிங்க இன்று சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக கோவில் நிர்வாகத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தன.

முன்னாள் போராளியை காணவில்லை என முறைப்பாடு-
 முன்னாள் போராளியான ஆசிரியரை காணவில்லை என யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். வடக்கு ஏழாலை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மணிவண்ணண் என்பவரையே இவ்வாறு காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது. குறித்த நபர் யாழ். இந்துக்கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார் என்றும் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என்றும் இன்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சுன்னாகம் பொலிஸார் இதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ டிரக் விபத்தில் 17 இராணுவத்தினர் காயம்-
 இராணுவ டிரக் வண்டியும் டிரக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து ஹிரிதலேயை நோக்கி பயணித்துகொண்டிருந்த இராணுவ டிரக் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.