வவுனியா ராஜ் முன்பள்ளியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-(படங்கள் இணைப்பு)
வவுனியா யேசுபுரம், புதிய வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள ராஜ் முன்பள்ளியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி கிராம சேவையாளர் திரு ஜி.எஸ். நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க இணைப்பாளர் திரு கோபி மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி தி.சோபனா,
சமூர்த்தி உத்தியோகஸ்தர் திருமதி. மகேஸ்வரி, ஒளிச்சுடர் சமூக மட்ட அமைப்புகளின் தலைவர் வைத்தியர் எ.செல்வநாயகம் (சுரேஷ்), கோமரசங்குளம் உடற்கல்வி ஆசிரியர் திரு ப.தங்கவேல் ஆகியோருடன் கிராம மக்கள் என பலரும் கலந்து சிறார்களின் விளையாட்டு விழாவினை சிறப்பித்திருந்தனர்.