Header image alt text

நீதவான் நீதிமன்ற கட்டளைகளில் மேல்நீதிமன்றம் தலையிடாது-

ilancheliyanயாழ். குடாநாட்டில் உள்ள நீதிமன்ற நீதிபதிகளினால் பிறப்பிக்கப்படுகின்ற போக்குவரத்து குற்றம் சம்பந்தமான தீர்ப்புக்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிடமாட்டாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றம் தொடர்பான வழக்கொன்றில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனுமீதான விசாரணையின்போது, அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என அவர் மறுத்துள்ளார். அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போக்குவரத்துக் குற்றங்கள் சம்பந்தமாக விசேடமாக மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்துமாறு இங்குள்ள நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. இத்தகைய தீர்ப்புக்களை மீளாய்வு செய்து சாரதி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துமாறு நீதவான் நீதிமன்றங்களினால் விடுக்கப்பட்ட கட்டளையை ரத்துச் செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. Read more

பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு புதிய அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்-

ertrrதமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபில் உள்ள விடயங்கள் நாட்டின் புதிய அரசியல் யாப்பில் சேர்க்கப்பட வேண்டும் என இந்துமத தலைவர்கள் மற்றும் இந்துமத பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவின் யாழ்.மாவட்டத்திற்கான இரண்டாம் நாள் அமர்வு நேற்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மேற்படி கருத்தை வலியுறுத்திய இந்துமத தலைவர்கள், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தையும் அவர்களிடம் கையளித்துள்ளனர். சின்மயா மிஷனின் வதிவிட ஆச் சாரியாரும் யாழ்.மாவட்ட சர்வமத பேரவையின் செயலாளருமான ஜாக்கிரத சைதன்யா சுவாமிகள், வீணாகான குருபீடத்தின் தலைவர் சிவஸ்ரீ சபா வாசுதேவ குருக்கள், இலங்கை சைவ குருமார் அர்ச்சகர் சபையினை சேர்ந்த எஸ்.மகாலிங்கசிவ குருக்கள், எம்.கோகுலன், இந்து அமைப்புக்கள் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.பரமநாதன், ஆகியோருடன் சமயப் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றினர். Read more

அரசியல் கைதிகள், காணாமல் போனோர் விடயத்தில் நிலையான தீர்வு-

missing personsதமிழ் தேசியக் கூட்டமைப்பின் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒரு விவாத பிரேரணையாக இல்லாமல் நிலையான தீர்வு காண்பதற்குரிய பிரேரணையாக இருக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனோர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். எதிர்வரும் 23ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு வலியுறுத்தி முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கவுள்ள இந்த பிரேரணை நிலையான ஒரு தீர்வினை எட்டக்கூடியதாக இருக்க வேண்டும். Read more

வவுனியா ராஜ் முன்பள்ளியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-(படங்கள் இணைப்பு)

IMG_4869வவுனியா யேசுபுரம், புதிய வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள ராஜ் முன்பள்ளியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி கிராம சேவையாளர் திரு ஜி.எஸ். நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க இணைப்பாளர் திரு கோபி மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி தி.சோபனா,

சமூர்த்தி உத்தியோகஸ்தர் திருமதி. மகேஸ்வரி, ஒளிச்சுடர் சமூக மட்ட அமைப்புகளின் தலைவர் வைத்தியர் எ.செல்வநாயகம் (சுரேஷ்), கோமரசங்குளம் உடற்கல்வி ஆசிரியர் திரு ப.தங்கவேல் ஆகியோருடன் கிராம மக்கள் என பலரும் கலந்து சிறார்களின் விளையாட்டு விழாவினை சிறப்பித்திருந்தனர். Read more

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிப்பு-

missingகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் மூன்று மாதங்களுக்கு, குறித்த ஆணைக்குழுவுக்கு செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை இம் மாதம் 15ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் இதன் காலஎல்லையை நீடிக்குமாறு ஆணைக்குழுவால் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், மே மாதம் 15ம் திகதி வரை ஆணைக்குழு தொடர்ந்தும் செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக குணதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்கள் போராட்டம்-

dgfgfgfgநெடுங்கேணி வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று முற்பகல் வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்திற்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர். உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த பிரச்சினை தொடர்பில் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசனுடன் ஆலோசித்து தீர்வொன்றை வழங்குவதாக உண்ணாவிரதத்தை முன்னெடுத்தவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே எதிர்பார்ப்பு-

reginold coorayவடக்கு மக்களின் மனங்களை வெல்வதே தனது எதிர்பார்ப்பு என, அம் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் மல்வத்துபீட அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்து பின், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைதி மற்றும் நல்லிணக்க தகவலை வடக்கு மக்களுக்கு கொண்டு செல்ல தான் தகுதியானவன் எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், கடந்த 14ம் திகதி வடக்கின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் நீர் மாசு, உரிய முறையில் குடிநீர் விநியோகமின்மையால் அவதி-

chunnakamயாழ். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கான குடிநீர் விநியோகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தாம் மாசடைந்த நீரையே அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். சுன்னாகம் தெற்கு பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் வலி தெற்கு பிரதேச செயலாளர் கூறுகையில், சுன்னாகம் தெற்கு பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை உடுவில் பிரதேச செயலகம் தனியார் அமைப்பொன்றுடன் இணைந்து முன்னெடுத்ததாவும், குறித்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும் அவர்கள் தமது பணியினை நிறுத்தியுள்ளதாகவும் ஊடகத்திற்கு கூறியுள்ளார். தம்மிடம் உள்ள வளங்களுக்கு அமைய தாம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு மேலதிகமான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள தம்மிடம் போதிய வளங்கள் இல்லையெனவும் வலி தெற்கு பிரதேச செயலாளர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் ஜேர்மன் உயரதிகாரிகளுக்குமிடையே விசேட கலந்துரையாடல்-

fdgfgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனி சென்றடைந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை பேர்லின் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டுள்ளார். விமானநிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியையும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனவையும் ஜேர்மனி அரசாங்கத்தின் பிரதம மரபுச் சீர்முறை அலுவலர் ஜெர்கன் கிரிஸ்டியன் மேர்டன்ஸ், ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக அமுனுகம உள்ளிட்ட இலங்கைத் தூதரக அலுவலர்கள் வரவேற்றனர். ஜேர்மனியில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜேர்மன் அதிபர் அன்ஜலா மேர்கல், சபாநாயகர் பேராசிரியர் நோபட் ஜெமன்ட் மற்றும் ஜேர்மனியின் சமஷ்டித் தலைவர் ஜோகிம் கோர்க் ஆகியோர் உள்ளிட்ட ஜேர்மனியின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜேர்மனிக்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக, கலாசார உறவுகளைப் பலப்படுத்துவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதன்மூலம் ஜேர்மனியுடனான இலங்கையின் வர்த்தக உறவுகள் பெரிதும் முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. Read more

தேர்­த­லுக்­காக அல்ல மக்­களுக்கு சேவை­யாற்­றவே வந்­தோம்- புளொட் அலு­வ­லகத் திறப்­பு­வி­ழாவில் சித்­தார்த்தன்-

dfgfநாங்கள் தேர்­தலில் வெற்றி பெற வேண்டும் என்­ப­தற்­காக மக்­க­ளிடம் வந்­த­வர்­க­ளல்ல. மக்­க­ளுக்கு சேவை­யாற்ற வேண்டும் என்­ப­தற்­கா­கவே மக்கள் முன்­னி­லையில் வந்தோம். ஆயுதப் போராட்ட அர­சி­ய­லுக்குள் தமிழ் இளை­ஞர்கள் குதிப்­ப­தற்கு நியா­ய­மான கார­ணங்கள் அப்­போது இருந்­தன. அன்­றைய நிலை­மையை இப்­போது திரும்பிப் பார்க்­கும்­போதும், அந்தக் கார­ணங்கள் சரி­யா­னவை என்றே தோன்­று­கின்­றது.

அதில் சந்­தே­க­மில்லை. இப்­போது ஆயுதப் போராட்டம் முறி­ய­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது, மீண்டும் ஆயுதப் போராட்ட அர­சி­ய­லுக்குள் போகக் கூடிய சூழல் இல்­லை­யென்­பதை ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளினால் நன்கு உண­ரப்­பட்­டி­ருக்­கின்­றது. யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான இந்தக் காலப்­ப­கு­தியில் சாத்­வீகப் போராட்டத்தின் மூலமே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டி­யுள்­ளது என்று வவு­னியா கோவில்­ கு­ளத்தில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மாவட்ட தலைமை அலு­வ­ல­கத்தைத் திறந்து வைத்து உரை­யாற்­றிய அந்தக் கட்­சியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய த.சித்­தார்த்தன் தெரி­வித்தார்.
Read more

யாழ். நீதிமன்றம்மீதான தாக்குதல் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களுக்கு பிடியாணை-

jaffna courtsயாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்களுக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கே யாழ். நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் இன்று இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 72 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். எனினும் 65, 66 மற்றும் 67ஆம் இலக்க சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. இன்றைய விசாரணைகளை அடுத்து குறித்த 3 சந்தேகநபர்களுக்கும் பிடியாணை பிற்ப்பிக்கப்பட்டதுடன் அடுத்த விசாரணையின்போது அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்துக்களை பெறும் நடவடிக்கை-

sfdfdபுதிய அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிய நியமிக்கப்பட்ட குழு இன்று யாழில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா, எஸ்.விஜேசந்திரன், கொழும்பு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் என். செல்வகுமாரன் மற்றும் குமுது குசும் குமார, ஹரினி அமரசூரிய, உபிள் அபேரத்ன, சுனில் ஜெயரட்ன உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய் மொழி மற்றும் எழுத்து மூல யோசனைகளைப் பெற்றுக்கொண்டனர். இந்த அமர்வில், பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் பிரதிநிதி தி.சிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட முன்னாள் அரச உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை கூறிவருகின்றனர். நாளையும் குறித்த செயலமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விசுவமடு விபத்தில் பெண் ஸ்தலத்தில் உயிரிழப்பு-

accidentமுல்லைத்தீவு விஸ்வமடு 12ஆம் கட்டைப் பகுதியில் மோட்டர் வாகனமும் மகேந்திரா கெப் ரக வாகனமும் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது உயிரிழந்தவர் 25 வயதான சிவில் பாதுகாப்பு பிரிவு முன்பள்ளி ஆசிரியர் சிவபாலன் கஸ்தூரி எனவும், இன்று சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியரியர்களுக்கான கலந்துரையாடலை முடித்துக் கொண்டு கிளிநொச்சி சென்று கொண்டிருந்த வேளை 12 ஆம் கட்டை பகுதியில் வைத்து வெள்ளை நிற மகேந்திர கெப் ஒன்றுடன் விபத்துக்குள்ளானதாகவும் விபத்துக்குள்ளான மகேந்திரா வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பு வலய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ச-

yosithaசி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விசேட வலயமாக்கப்பட்டுள்ளது.

யோசித உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.என்.சீ.தனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சிறைப்பகுதிக்கு அருகில் உள்ள சிறையில் இருந்து கையடக்கத் தொலைப்பேசி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிலையில் பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோசித உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமலையில் கைக்குண்டு வீச்சு, சந்தேகத்தின்பேரில் இருவர் கைது-

arrest (30)திருகோணமலை உப்புவெளி நான்காம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றின்மீது கைக்குண்டு வீசப்பட்டமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 40 மற்றும் 44 வயதுடைய இருவர் எனவும் இன்று இவர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடைய வீட்டின்மீது நேற்று இரவு சுமார் 9.30அளவில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இவ்வாறு வீசப்பட்ட கைக்குண்டு வீட்டில் பட்டு வெடித்துள்ளது.

இதன்போது உயிராபத்து எதுவும் ஏற்படவில்லையென்பதுடன், வீட்டுக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அசம்பாவிதத்துக்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமென விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா உமாமகேஸ்வரன் இல்லத்தில் புளொட் காரியாலயம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)-

04 (1)வவுனியா மாவட்ட புளொட் காரியாலயங்களில் ஒன்றான கோவில்குளம், உமா மகேஸ்வரன் வீதி, சிவன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள உமா மகேஸ்வரன் இல்லத்தில் அமைந்துள்ள அலுவலகம் புனருத்தாபனம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் செயற்பாடுகளுக்காக இன்றையதினம் 14.02.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்படி காரியாலயத்தினை திறந்து வைத்தார்.

இன்றைய நிகழ்வுகள் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களது தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக கோவில்குளம் சிவன் ஆலயத்தில் கட்சியின் சார்பில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சியின் பெயர்ப்பலகையை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திரைநீக்கம் செய்ததுடன், கட்சியின் கொடியினையும் ஏற்றிவைத்து, காரியாலயத்தினை நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
Read more

வட மாகாண புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவிப்பிரமாணம்-

reginold coorayவட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாளை மறுதினம் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆங்கில ஆசிரியரான ரெஜினோல்ட் குரே 1988ஆம் ஆண்டு மேல் மாகாண சபை உறுப்பினராக அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். மேல் மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ள அவர் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திற்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் பதவிகளை வகித்திருந்த ரெஜினோல்ட் குரே சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராவார். வடமாகாண ஆளுநராகவிருந்த எச்.எம்.ஜி.எஸ். பளிஹக்கார, ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியதையடுத்து, ரெஜினோல்ட் குரே ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பண்டாரவளை விபத்தில் மாணவிகள் உட்பட 27 பேர் காயம்-

accident bandarawelaபண்டாரவளை ஒத்தக்கடை ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர். சம்பரகமுவ பல்கலைகழகத்தில் வெளிவாரி ஆங்கில பாடப் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் பயணித்த பஸ் ஒன்றுடன் கொள்கலன் மோதி இன்றுகாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 25 மாணவிகள் காயமடைந்துள்ளதுடன் கொள்கலன் ஓட்டுனரும் பஸ்ஸின் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த மாணவிகளில் இருவரின் நிலை சற்று கவலைக்கிடமாக காணப்பட்ட நிலையில் குறித்த இரண்டு மாணவிகளையும் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள், பண்டாரவளை, தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்சி மாற்றத்தினால் தமிழர் வாழ்க்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது-சுரேஸ்-

sureshஆட்சி மாற்றத்தின் பின்னர், வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலைமை மேலும் விருத்தி செய்யப்பட வேண்டும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் மக்கள் வாழ்ந்த விதத்திலும் பார்க்க, தற்போது வாழ்க்கைச் சூழல் இலகுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சொந்தமான காணித் தொகுதிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்நிலைமை இன்னும் விருத்தி செய்யப்படுவதுடன், பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவும், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.