Header image alt text

ஐ.நா ஆணையாளரின் யாழ் விஜயமும் சந்திப்புகளும்-(படங்கள் இணைப்பு)

dgfgfgஇலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹ_சைன் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இதன்பொது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை இன்றுகாலை 10மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் நின்றிருந்த நிலையில் அவர்களையும் ஆணையாளர் சந்தித்துள்ளார். இதேவேளை தமது ஐ.நா ஆணையாளருடனான சந்திப்பு குறித்து வடமாகாண முதலமைச்சர் கருத்துக் கூறுகையில், அரசியல் கைதிகள் விடயத்தில் பொதுமன்னிப்பை விட அவர்களின் வழக்கு விசாரணை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் தான் சரியானதாக அமையும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார். Read more

ஐ.நா விசேட பிரதிநிதி அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம்-

united nationsஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தும் நோக்கில் 11பேர் கொண்ட விசேட செயலணி ஒன்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட உள்ளது. 2015ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கி இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்தவே 11 பேர் அடங்கிய விசேட ஆலோசனை செயலணி ஒன்றை இலங்கை அரசாங்கம் நியமிக்க உள்ளது. இந்த விசேட செயலணியின் பணிகளுக்கு உண்மை, நீதி மற்றும் வன்முறைகள் மீள எழாமல் இருப்பது குறித்த ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி பெப்லே டி கிரிப்பின் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. அடுத்த வாரம் இந்த விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். Read more

ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி வைத்தியசாலைகளுக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு- (படங்கள் இணைப்பு)

IMG_4414சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” முதற்கட்டமாக கடந்த முதலாம் திகதி (01.02.2016) அன்று வவுனியா பொது வைத்த்யசாலைக்கு வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட பிராந்திய வைத்தியசாலைகளுக்கும் 03.02.2016 அன்று “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” வழங்கி வைக்கப்பட்டன. தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க, சுவிஸ் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் வவுனியா ஓமந்தை, நவ்வி(பாலமோட்டை), புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒருதொகுதி பொருட்களே 03.02.2016 அன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டு அன்பளிப்பு பொருட்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடம் நேரடியாக கையளித்தார்கள்.
Read more

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்-

Zeid Raad al-Husseinஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹ_ஸைன் இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் எதிர்வரும் 10ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளார். கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அவர் இன்று ஆறுபேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. செய்யித் ராத் அல் ஹ_ஸைனின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பகுதிகளுக்கும் செல்லவுள்ளார். இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ராத் அல் ஹ_ஸைனின் யாழ். விஜயத்தின்போது காணாமல் போனவர்களின் உறவுகள் நாளை ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதேவேளை ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் செய்ட் அல் ஹ_சைன் இலங்கையில் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான பல்வேறுபட்ட நடைமுறைச் சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் தொடர்பாக அனைவருடனும் கலந்துரையாடவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு-

tnaதமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், சந்திப்பு திருப்திகரமானதாக இருந்தது. எமது மக்கள் வடக்கு கிழக்கில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து, விஷேடமாக காணி சம்பந்தமான பிரச்சினை, இராணுவத்தின் அதிக பிரசன்னம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் விடயம், மீள்குடியேற்றம், வீட்டு வசதி, வடக்கு மீனவர்களின் பிரச்சினை, போன்றவை குறித்து அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினோம் என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

trtrஇலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நாடுகளுக்கும் முக்கியமானதாக கருதப்படும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. நாட்டின் நல்லிணக்கத்திற்கும் அபிவிருத்தி நடைவடிக்கைகளுக்கும் முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக இதன்போது சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். நல்லிணக்க செயற்பாடுகளுக்கும், பொருளாதார திட்ட யோசனைகளுக்கும் இந்திய அரசு வழங்கிய ஆதரவிற்கு இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்கு விஜயம்-

mangalaமீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அழைப்பின் பரில் அவர் எதிர்வரும் சில தினங்களில் இந்தியா செல்ல இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற மீனவர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பாக்கப்படுகிறது. நேற்று இடம்பெற்ற இந்து-இலங்கை ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட்டுள்ளதுடன் அதற்கு தீர்வு பெற்றுக்கொள்ன இருதரப்பும் ஒப்புக்;கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டை அறிமுகம்-

NIC12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும். இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், நபரின் பிறந்த ஆண்டை குறிக்கும். இரண்டாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபர் பிறந்த ஆண்டின் ஜனவரி மாதம் 1ம் திகதி முதல், அவரது பிறந்த தினம் வரையில் உள்ள நாட்களின் எண்ணிக்கையை குறிக்கும். அத்துடன் மூன்றாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபரின் பால்நிலை குறித்த தகவலை கொண்டிருக்கும். Read more

இலங்கை இந்தியாவுக்கு இடையில் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

metஇலங்கை மற்றும் இந்தியாவுக்குமிடையில் இரு ஒப்பந்தங்கள் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் பங்கேற்கவென இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இலங்கைக்கு இன்று விஜயம் செய்தார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் சுஷ்மா சுவ்ராஜ் மற்றும் வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உட்டபட இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் வடமாகாணத்தில் 27 பாடசாலைகளை மீள்புனரமைத்தல் ஆகிய இரு ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டன.

வவுனியா மன்னார் வீதியை மறித்து எட்டு கிராமங்களின் மக்கள் எதிர்ப்பு-

fffவவுனியா, வேளன்குளம் பிரதேசத்தின் 08 கிராமங்களை சேர்ந்த மக்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பூவரசன்குளம் சந்தியில் இருந்து திவன வீதி 35 ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்படவில்லை என்று கூறி அந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வெள்ளாங்குளம், மடுக்குளம், சிவநகர், கோவில்மூட்டை, சின்னத்தம்பனை, செங்கப்படை, புன்வுகுடம், கோவில்புதுகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 400 குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். யுத்தம் காரணமாக 1999ம் ஆண்டு இந்த கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 2010ம் ஆண்டு மீண்டும் இப்பிரதேசங்களில் மீள்குடியேறியிருந்தனர். எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட செயலாளர் ரோஹண புஷ்பகுமார குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்குவதாக உறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடயத்திலிருந்து கலைந்து சென்றனர்.

இந்திய வெளியுறவமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம்-

sushmaஇலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இன்றுபகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அவர் அலரிமாளிகையில் வைத்து இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான், மாலைதீவு இணைந்து இராணுவ பயிற்சி-

etஇலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் படையினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இராணுவ பயிற்சி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இரண்டு வாரங்கள் இடம்பெற்றதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.

இதன்போது பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த நாடுகளுக்கிடையில் விஷேட இராணுவ உறவை மேம்படுத்தக்கூடியதாக இருந்ததாகவும் பாகிஸ்தானின் உயர் இராணுவ அதிகாரி கூறியுள்ளார். இந்த கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கை ஈகல் டேஷ் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜே.வி.பி முறைப்பாடு-

tyyuyசம்பூர் மின் திட்டம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை சம்பந்தமாக

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்ய மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

கிழக்கு மக்களின் குரல் அமைப்புடன் இணைந்து இந்த முறைப்பாட்டை மேற்கொள்ள உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

இதன்போது ஜே.வி.பியின் அரசியற்குழு உறுப்பினரான கே.டி. லால்காந்த கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இந்த திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க தீர்மானம்-

ewrer750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.

இரட்டை பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களில் 3500 பேருக்கு இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள், கடந்த மார்ச் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெற்றிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ் விஜயத்தின்போது ஆர்ப்பாட்டம்-

wrerereஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹ_ஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை மறுதினம்இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலில், காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹ_சைனை சந்திப்பதற்கு ஐநா வதிவிட காரியாலயத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்றும், இனியும் தம்மை ஏமாற்ற வேண்டாமென்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சித்தன்கேணியில் அன்னதான மண்டபம் திறந்துவைப்பு-படங்கள் இணைப்பு-

P1060546வட்டுக் கிழக்கு சித்தன்கேணியில் அமைவு பெற்றுள்ள துறட்டிப்பனை முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு அருகில் தலைவர் திரு.இதயக் அவர்கள் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு.திருமதி. கனகரத்தினம் மனோன்மணி அவர்களது உபயத்தில் அழகிய அன்னதான மண்பம் அமையப்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் வலிமேற்கு பிரதேசசபையின் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், மற்றும் வலி மேற்கு பிரசே செயலர் திரு.ஆ.சேதிநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். முன்னதாக துறட்டிப்பனை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று விருந்தினர்கள் மங்கள வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து முன்னாள் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், மற்றும் வலிமேற்கு பிரசே செயலர் திரு.ஆ.சேதிநாதன், இழைப்பாறிய கிராம சேவை அலுவலர் திரு சிறீதரன் ஆகியோர் மங்கல விழக்கேற்pனர். தொடர்ந்து முன்னாள் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், அவர்கள் நாடாவெட்டி மண்டபத்தினை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வலி மேற்கு பிரசே செயலர் திரு.ஆ.சேதிநாதன் அவர்கள் மண்டபத்தின் நுளைவாயிலினை திரை நீக்கம் செய்தார். தொடர்ந்து மண்டபத்தின் நினைவுக்கல்லை திரு.திருமதி சந்திரன் தம்பதிகள் திரைநீக்கம் செய்தனர். Read more

லண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-

_DSC3519நேற்றையதினம் (03.02.2016) லண்டன் Eastham நகர மண்டபம் Council Chambersஇல் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Eastham உப நகரபிதா திரு. போல் சத்தியநேசன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த ஒன்றுகூடலில் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினராலும் மண்டபம் நிறைந்திருந்தது.

திரு. போல் சத்தியநேசன் அவர்கள் இங்கு உரைநிகழ்த்துகையில், தன்னை உதாரணமாக குறிப்பிட்டு பலரின் வாழ்விற்கு London PLOTE வழங்கிய ஆக்கபூர்வமான உதவிகளை குறிப்பிட்டார்.

தோழர் சபா சுகந்தன் அவர்கள் கூட்டத்தினை ஒழுங்கமைத்து வழங்கினார்.

தொடர்ந்து கேள்விகளுக்கு தெளிவானதும், தீர்க்கமானதுமான பதில்களை தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வழங்கியமை குறித்து பலராலும் பாராட்டப்பட்டார்.

Read more

இன்று இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம், தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது-

dfdfdfdஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையின் 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக இன்று நடைபெற்றது. 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய சம்பிரதாயபூர்வமாக நிகழ்வில் முதலில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அரங்கிற்கு வருகை தந்தார். அதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுதந்திர தின நிகழ்விற்கு வருகை தந்தார். சுதந்திர தின நிகழ்விற்கு தலைமை தாங்கிய, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய கொடியை ஏற்றிவைத்து நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார். நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுதருவதற்காக போரடிய தேசிய வீரர்கள் மற்றும் படையிருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் 3 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய சுதந்திர தின தேசிய நிகழ்வை முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு மேலும் அலங்கரித்தது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தின விசேட உரையாற்றினார். ஜனாதிபதி தெரிவித்ததாவது.
Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு 606 கைதிகளுக்கு பொது மன்னிப்பு-

prisonersசுதந்திர தினத்தை முன்னிட்டு 606 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களுல் 13 பெண் கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஸார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார். சிறு குற்றமிழைத்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுபவர்களில் அதிகமானவர்கள் மாத்தறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 67 கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து 14பேர் விடுதலை செய்யப்பட்டனர். களுத்துறை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் இருந்து 59பேர் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள், அபராதம் செலுத்த முடியாதவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அதில் 593 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கே.பி வழக்குக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெற அறிவுறுத்தல்-

KPபுலிகள் அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர்களுள் ஒருவரான குமரன் பத்மநாதன் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இவ் அறிவுறுத்தல் அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டது. இவ் வழக்குக்கு இந்தியப் பொலிசாரின் உதவி அவசியமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்த வேண்டுகோள் தமது தரப்பால் முன்வைக்கப்பட்டது என ஜேவிபியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் குமரன் பத்மநாதனை கைதுசெய்யுமாறு இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்தியக் காவல்துறையின் ஒத்துழைப்பை பெற்று வழக்கை விரைவாக முன்னெடுக்குமாறு மனுதாரர் சார்பில் கோரப்பட்டது. கேபி புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்த விசாரணைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதென அரசதரப்பு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

காணாமல் போனோரை தேடித் தருமாறு வலியுறுத்தி போராட்டங்கள்-

mssingஇலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று காணமால் போனவர்களின் குடும்ப உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். காணாமல் போனோரை தேடித் தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் இன்றும் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று காலை முதல் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடித்தருமாறும், தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இதன்படி கறுப்பு நிற துணிகளால் தமது வாய்களை அடைத்தவாறு வவுனியா நகர சபைக்கு முன்னாள் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை எங்கே என்று எழுதப்பாட்ட பதாகைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர். Read more

யாழ் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆஜர்-

jaffna courtsகடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி காணாமல்போன, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் தொடர்பிலான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இன்றைய வழக்கு விசாரணையின் போது தொடர்பாடல், மற்றும் மொழி பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக வழக்கு விசாரணை எதிர்வரும் மே 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன லலித் மற்றும் குகன் ஆகியோர் அரச பாதுகாப்பில் இருப்பதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக கூறியிருந்தார். இது குறித்து சாட்சியமளிப்பதற்காகவே அவருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரை யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும் கெஹலிய நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. Read more