Header image alt text

முல்லைத்தீவில் 5,612 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்-

kilinochi mullaitivuமுல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 5,612 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் வாழ்ந்து வருவதாக மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மணலாறு, மாந்தை கிழக்கு, துணுக்காய் முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 41,322 குடும்பங்களில் 5,612 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் போரில் தமது துணையை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை காணாமல்போன நிலையிலும் பல பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றனர். அத்துடன் போரின் பின்னர் குடும்ப பிணக்குகளாலும் பெண்கள் குடும்பத்திற்கு தலைமை ஏற்றுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் முடிந்து 7 வருடங்கள் கடந்தபோதும் இவர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் அங்கங்களை இழந்தநிலையில் 2,151 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். எவ்விதமான உதவிகளுமற்ற நிலையில் பல நெருக்கடிகளுக்கு இவர்கள் முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைதிகளுக்கு பாய்களுக்கு பதிலாக மெத்தைகள்-

657676கைதிகளுக்கு வசதியாக பயன்படுத்தக் கூடிய வகையிலான மெத்தைகளை பெற்றுக் கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் தூங்குவதற்காக தற்போது பாய்களே வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுக்காக மெத்தைகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்தத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட மெத்தைகளையே கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மெத்தைகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தாலேயே தயாரிக்கவும், இதன் முதல்கட்ட நடவடிக்கையை கொழும்பு வெலிகடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் பாய்களுக்கு பதிலாக மெத்தையையே பெற்றுக் கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முதலமைச்சர்கள் மாநாடு, முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் புறக்கணிப்பு-

xcvcv32 ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று ஹிக்கடுவையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. ஏனைய 8 மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் மாகாணசபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்துள்ளனர். அத்துடன் நாளை 23ஆம் திகதி இடம்பெறும், வாராந்த அமைச்சரவை மாநாட்டுக்கு வருகைதந்து, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளைப் பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைக்குமாறு அம்மாநாட்டில் பங்கேற்றிருந்த ஏனைய எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்களிடம், ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இம்மாநாட்டில் பங்கேற்காமைக்கான காரணம் தெரியவரவில்லை. அவர் நேற்று யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாணவரின் கல்வியை சீர்குலைக்க வேண்டாமென மகஜர்-

sfdfdfdfffதுணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மாணவர்களின் கல்வியை சீர்குலைக்காமல், கல்வி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மாணவர்களின் பெற்றோர் வடமாகாணக் கல்வி அமைச்சரிடம் நேற்று மகஜர் கையளித்துள்ளனர். வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு முன்பாக ஒன்றுகூடிய பெற்றோர், கல்வி அமைச்சர் குருகுலராஜாவிடம் குறித்த மகஜரைக் கையளித்து விரைவில் தீர்வை முன்வைக்குமாறு கோரியுள்ளனர். துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி, ஒரே நாளில் 200 வரையான ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லாது திணைக்களத்தில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவைதானா ஆசிரியர்களின் கடமை? இவ்வாறு இவர்கள் பணியைப் புறக்கணித்து மாணவர்களின் கல்வியைப் பாழடிக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டிய பெற்றோர், துணுக்காய் கல்வி வலயப் பிரச்சினைகளுக்கு, கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இளம் பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு-

dead.bodyஅம்பாறை, அக்கரைப்பற்று 9ஆம் பிரிவைச் சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணியான லோ. நிதர்சினி (வயது-27) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் இந்த சடலம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா, தற்கொலையா என்பது குறித்து உறுதி செய்யப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..!(படங்கள் இணைப்பு)-

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே!
dasகடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மிகவும் தொலைவிலுள்ள புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பதற்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இத்தகையதொரு நிலையில் புங்குடுதீவு மகாவித்தியாலய நிர்வாகம் மற்றும் அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மேற்படி மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள் இவ்வருடம்(2016) ஜனவரி மாதம் முதல் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி தலைமையில் முதலமைச்சர்களின் 32ஆவது மாநாடு-

xcvcv32ஆவது முதலமைச்சர்களின் மாநாடு காலி மாவட்டத்தின் ஹிக்கடுவையில் இன்றையதினம் காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் ஆரம்பமானது. தென் மாகாணத்தை முன்னிலைப்படுத்தி இம்முறை இந்த மாநாடு நடைபெறுகின்றது. நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண முதலமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டின் தலைவராக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா செயற்படுகின்றார். இறுதியாக மூன்று வருடங்களுக்கு முன்னர் முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிப் பிரமாணத்தின் பின்னர் நடைபெறும் முதலாவது முதலமைச்சர்கள் மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு பதிலாக, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கலந்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழில் உலக நீர் தின நிகழ்வின் மாபெரும் நடைபவனி-

rerதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ் மாவட்ட பிராந்திய அலுலகத்தின் ஏற்பாட்டில் சுத்தமான குடிநீருக்கான மக்களின் நலன் என்னும் கருப்பொருளில் உலக நீர் தின நிகழ்வின் மாபெரும் நடைபவனி இன்று இடம்பெற்றது. யாழ் பண்ணையில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அலுலகத்தில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை இந்த நடை பவனி சென்றது. நிலத்தடி நீரை பாதுகாப்போம், சுத்தமாக இருக்கும் நீருக்கு புத்துயிர் அளிப்போம், இன்றைய மழை நீர் சேகரிப்பு நாளைய குடிநீர் பாதுகாப்பு, சொட்டு நீரும் எங்கள் சொத்தே, பொதுமக்கள் விழிப்படையுங்கள், போன்ற பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் இதில் கலந்துகொண்டனர். மேலும், பிரதம அதிதியாக வடமாகாண தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பணிப்பாளர் பாரதிதாசன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்த மாபெரும் பேரணியினை ஆரம்பித்துவைத்தனர். இப் பேரணி யாழ் ஆஸ்பத்திரி, வேப்படி சந்தியூடாக யாழ் மாவட்ட செயலகம் வரை சென்றதோடு, அங்கு சுத்தமான குடிநீர் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது. இதில் மாவட்ட செயலக அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பங்களாதேஷ் புலனாய்வாளர்கள் இலங்கைக்கு விஜயம்-

sfdfdd81 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பங்களாதேஷ் புலனாய்வாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். குறித்த நிதி மோசடி தொடர்பிலாள விசாரணைகளுக்கு எப்.பி.ஐ உதவுதாக உறுதியளித்துள்ளது. பங்களாதேஷ் புலனாய்வாளர்கள் இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் நியுயோர்க்கில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் வங்கியிலும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிதி மோசடியில் எப்.பி.ஐயின் அதிகாரிகள் பங்களாதேஷ் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக பங்களாதேஷ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சயிபுல் அலாம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 5ஆம் திகதி மோசடிக்காரர்கள் பங்களாதேஷ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த நிதியை நியுயோர்க் மத்திய ரிசர்வ் வங்கி ஊடாக கொள்ளையிட்டு பிலிப்பைன்ஸில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

1000 ரூபா சம்பளம் கோரி தொழிலாளர்கள் போராட்டம்-

ytuyபொகவந்தலாவ – ஜேப்பல்டன் பூசாரி தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இதுவரையிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து மலையக அரசியல் தலைவர்கள் மௌனம் காப்பது பெரும் கவலையளிப்பதாக உள்ளது எனவும், அவர்கள் கூறினர். இதேவேளை, தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு முடிவு கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

funeral 20.03.2016 (10)09-03-2016 புதன்கிழமை அன்று லண்டனில் காலமான அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (20.03.2016) லண்டனில் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆலய நிர்வாகிகள்,

சமூகத் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.  Read more

தற்போதைய அரசை 5 வருடங்களுக்கு எவராலும் மாற்ற முடியாது-ஜனாதிபதி-

maithriநாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன காரணமாக கூட்டங்கள் நடாத்துவதற்கும் ஊர்வலங்களை மேற்கொள்வதற்கும் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அதனை வழிநடாத்தும் தலைவர்கள் வெள்ளை வான்களை அனுப்பி ஆட்களை காணாமல் செய்ததைப் போன்று செய்வது தற்போதைய அரசின் கொள்கையல்ல. எவ்வாறான கோஷங்களை முன்வைத்தாலும் எதிர்வரும் 5 ஆண்டுகள் நிறைவடையும் வரை இந்த அரசை மாற்றுவதற்கு எவராலும் முடியாது. தோல்வியடைந்த அரசியல் சக்திகள் மேலும் தோல்விகளைத் தழுவி அரசியலில் இருந்து ஒதுங்கும் விதமாக எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் இந்நாட்டுக்குத் தேவையான சமூக, பொருளாதார மாற்றத்தை மேற்கொள்வதற்குப் பாடுபடுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அம்பாறையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். Read more

சித்தன்கேணி பாலர் பாடசாலைக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கிவைப்பு-

ertrtவலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் புலம்பெயர் தாயக உறவுகளின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வரும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற நிகழ்சித்திட்டத்தின் கீழ்

சித்தன்கேணியில் இயங்கிவரும் பாலர்பாடசாலையின் சிறார்களுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள்

குறித்த முன்பள்ளியின் பிரதம ஆசிரியரான செல்வி. லீலாவதி மாரிமுத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மின்தடை தொடர்பில் ஆராய விஷேட ஜேர்மன் நிபுணர்கள்-

dfdffஇலங்கை மின்சார சபைக்கு சொந்தமான உப மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் இருவர் நாளை இலங்கை வரவுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பியகம பகுதியிலுள்ள உப மின் நிலைய மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டதோடு வெள்ளிக்கிழமை ஜா-எல கடுகொட பிரதேசத்திலுள்ள மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டிருந்தது.

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுபெற்ற மாணவிக்கு பாராட்டு-

wererஎமது கல்வித்திட்டத்தில் 2013 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்வாங்கபட்ட கிளிநொச்சி சென்ற் திரேசா மகளிர் கல்லூரி மாணவி அ.குணலீசா நடந்து முடிந்த க.பொ.த பரீட்சையில் 8 A, B எடுத்து சித்தியெய்தியுள்ளார்.

இவரின் தந்தை கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார். இவரின் குடும்ப சூழ்நிலையிலும் தனது கல்வியில் ஆர்வம் கொண்டு பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியெய்திய இவருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதுடன் 

இத்தருணத்தில் தொடர்ந்தும் இவருக்கான கல்வி நடவடிக்கைகளை பொறுப்பேற்று மாதந்தோறும் எம் ஊடாக பண உதவிசெய்து வரும் ஜேர்மனி நாட்டை சேர்நத JOYCESHOP இனருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.  (வட்டு இந்து வாலிபர் சங்கம்) Read more

சிறுநீரக மோசடி விடயத்தில் சர்வதேச பொலிஸ் உதவி பெற தீர்மானம்-

interpolஇலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள இந்திய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இந்த வியாபாரம் சர்வதேச அளவில் இடம்பெற்றதால், சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்று இந்த விசாரணைகளை முன்னெடுக்க, இந்திய பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் பந்தோலி, மும்பாய் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இந்த வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்வதே, இதன் நோக்கமாகும். இதன்படி இவ்விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, இந்தியாவின் ஆனந்த் மாவட்ட பொலிஸார் கூறியுள்ளனர். இந்தியாவின் பந்தோலி பகுதியில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சிலரிடம் பணத்துக்கு சிறுநீரகங்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர் அண்மையில் இந்தியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம்-உதவித்திட்டம்-

ttyyவலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் என்ற உதவித் திட்டத்தின்கீழ்

ஜேர்மனிய புலம்பெயர் உறவுகளால் அனுப்பி வைக்கப்பட்ட இரும்பு ஒட்டும் தொழிலுக்குரிய உபகரணங்களின் ஓரு தொகுதி 15.03.2016 அன்று

தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினர் திரு.யாதவன் அவர்களால் வன்னியில் இருந்து மீளக்குடியேறிய இரும்பு ஒட்டும் தொழிலை மேற்கொண்வரும் திரு. யோ.ரவீந்திரன் என்பவருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் பங்கேற்க புளொட் தலைவர் த.சித்தார்த்தன்(எம்.பி) லண்டன் பயணம்-
 
D.Sithadthan M.P,.09-03-2016 புதன்கிழமை அன்று லண்டனில் காலமான அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று நண்பகல் லண்டன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 
அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நாளை (20.03.2016) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 8.00 மணிமுதல் பிற்பகல் 12.00 மணிவரையில் லண்டனின் Richard Challoner School, Manor Drive North, New Malden, KT3 5PE, United Kingdom  என்ற முகவரியில் இடம்பெற்று நாளை பிற்பகல் 1.20மணியளவில் North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden, SM4 4NU, United Kingdom என்னுமிடத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.
ரஷ்ய விமான விபத்தில் 61பேர் உயிரிழப்பு-
 
flightரஷ்யாவில் (டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 737 – குடல னுரடியi ) என்ற பயணிகள் விமானம் இன்று காலையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய அரபு இராஜியத்திலிருந்து ரஷ்யாவின் தென்பகுதிக்கு பயணித்த குடல னுரடியi விமானத்தை தரையிறக்க முற்பட்டவேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தெளிவற்ற வானிலை காரணமாக ஓடு தளத்தில் விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது. சேதவிபரங்கள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட உடனடித் தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் விமானத்தில் பயணித்த 55 பயணிகள் 6 ஊழியர்கள் என 61 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் 100 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழிகளிலும் கடிதங்கள் அனுப்புவது கட்டாயம்-

rtytytஅரசாங்க அலுவல்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டியது மீறப்பட முடியாததொன்று என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார். இதுவரையிலும் இந்த நடைமுறை மீறப்பட்டிருந்தால் எதிர்வரும் 3 மாதங்களில் அதனை சரிப்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் பணித்துள்ளார். கொழும்பில் உள்ள அபிவிருத்தி நிர்வாக மையத்தில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான இந்த வருடத்தின் இரண்டாவது சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். நிர்வாகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அபிவிருத்திக்குத் தேவையான நிதி, அரசியல் பழிவாங்கல் போன்ற மக்களை பாதிக்கும் விடயங்கள் உள்ளிட்ட பலவற்றை அமைச்சர் இதன்போது கேட்டறிந்துகொண்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

பசுபிக் விமானப்படை அதிகாரி இலங்கைக்கு விஜயம்-

pacificஅமெரிக்காவின் விமானப்படையின் பசுபிக் விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஹவாயில் உள்ள பேர்ள் துறைமுக பசுபிக் விமானப்படைகளின் உதவித் தளபதியின் அணிதிரட்டல் உதவியாளரான மேஜர் ஜெனரல் ஏபெல் பரியென்ரஸ் எனும் உயர் அதிகாரியே இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.நேற்று விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தலைமை அதிகாரி எயாவைஸ் மார்ஷல் குருசிங்கவை சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார். இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அதிகாரியே 1991ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலைவனப்புயல் தாக்குதல் மற்றும் 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈராக் மீதான தாக்குதல் போன்றவற்றிற்கு அமெரிக்க விமானப்படை அணிகளை வழிநடத்தினார் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நீதிபதிகள் வேண்டாம்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-

maithripalaசர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்வதற்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது பூரண நம்பிக்கை வைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமான நிலை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற தேசிய சட்டப் பேரவையில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பேரவையில் கலந்து கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தை பலப்படுத்தி பொறுப்புக் கூறல் செயற்பாட்டை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். வௌ;வேறு துறைகள் சம்பந்தமாக பாராளுமன்ற குழுக்கள் நியமித்து நாட்டிற்கு பொறுப்புக் கூறும் பொது ஆட்சியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார். வெளிப்படைத் தன்மையுடைய நிதிக் கொள்கை ஒன்றை ஏற்படுத்துவது அதன் ஒரு நோக்கம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மருந்து விற்பனை தொடர்பில் இந்தியப் பிரஜைகள் கைது-

indian mediமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்தியப் பிரஜைகள், காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து நேற்று காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட 5 பெண்களும் 7ஆண்களும் அடங்குகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக இவர்கள் காத்தான்குடியில் தங்கியிருந்தாகவும் காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ஏ.பீ.என்.நிஸாந்த தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகளிடமிருந்து இலேகியம், எண்ணெய் மற்றும் தூள் உள்ளிட்ட சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்கர் ஆகியோரின் வழிகாட்டலில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதரவின் ஆலோசனையில் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் வைத்தியசாலை தாதியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்கிறது-

nurseயாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அவவர சிகிச்சை பிரிவு தவிர்ந்த எனைய அனைத்துப்பிரிவுகளும் தமது அன்றாட செயற்பாட்டினை இழந்திருந்தன. இதனால் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியரை பார்வையிடுவதற்கு வருகின்ற மக்கள் பெரும் அசௌகரிகமான நிலைக்கு உட்பட்டுள்ளனர். இது தொடர்பில் தாதியார்கள் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலையின் விடுதியில் பார்வையாளர் ஒருவர் தாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் தாதியர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டு வந்த தாதியர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்றைய ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கின்றது என்றார். இந்நிலையில் வைத்தியசாலை நடவடிக்கைகள் முடக்கப்பட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக வீதியில் வாகனங்களுக்கு நிரந்தர அனுமதிப்பத்திரம்-

highwayஅதிவேக வீதியில் வாகனத்தை செலுத்துவதற்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக நிரந்தர அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த நிரந்தர அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் தொடக்கம் விநியோகிக்கப்படவுள்ள நிரந்தர அனுமதிப்பத்திரங்கள் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும் குறித்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் உரிமையாளர் குறித்து எவ்வித முறைப்பாடுகளோ அல்லது குற்றச்சாட்டுக்களோ காணப்படாவிடின் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்திற்கான கால எல்லை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும். தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக போக்குவரத்து அனுமதிப்பத்திரம் 2 வாரங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்க வேண்டியுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ,பி.ஹேமச்சந்திர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாவிதன்வெளி பகுதியில் குடிநீருக்குத் தட்டுப்பாடு-

waterஅம்பாறை நாவிதன்வெளி குடியிருப்புமுனைக் கிராமத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதுடன், நீரைப் பெற்றுக்கொள்வதற்காக அயல்கிராமங்களான நாவிதன்வெளி, 7 ஆம் கிராமம், அன்னமலை போன்ற கிராமங்களை நாடி செல்வதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை அயலிலுள்ள ஆற்றிலே தமது அன்றாடத் தேவைகள் மற்றும் குளிப்பதற்கு பயன்படுத்துவதாகவும், அந்த ஆற்றில் கழிவுப் பொருட்கள் வீசப்பட்டு வருவதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் அக்கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். நாவிதன்வெளிப் பகுதிக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பினால் குழாய் நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் மக்கள், அதற்கான வேலைகளை விரைவில் துரிதப்படுத்தி குடியிருப்பு முனைக்கிராமத்திற்கு நீர் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக இந்தக் கிராமத்திலுள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே காணப்படுகின்றதாகவும் வறட்சி காரணமாக விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை நல்லாட்சி அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு-

pillaiyanமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக

கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன நாடு திரும்பினார்-

rajithaசுகயீனம் காரணமாக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்று அங்க சிகிச்சை பெற்றுவந்த சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்றிரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

சிங்கப்பூர் மவுன்ட் லெவன்யா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்றிரவு 9.30 மணியளவில் யூ.எல். 309 என்ற இலங்கை விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் நாடு திரும்பியுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கடந்த பெப்ரவரி 16ம் திகதி சிங்கப்பூர் மௌன்ட் எலிசபத் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

துறைமுக அதிகாரசபையின் தலைவர் வாக்குமூலம்-

harbourஇலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்மிக ரணதுங்க வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

தனது சட்டத்தரணியுடன் அங்கு சென்றிருந்த அவர் எதிர்வரும் 24ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாவதாக வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

துறைமுக அதிகாரசபையின் தலைவர், அண்மையில் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தி தனது தொலைபேசியில் படம் பிடித்திருந்தார். அது சம்பந்தமாக குறித்த ஊடகவியலாளர் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

விமல் வீரவன்ஸ உள்ளிட்ட 07 பேருக்கு பிணை-

vimalகொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ உட்பட 7 பேரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹ_சைனின் இலங்கை விஜயத்தின் போது இவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, ரே?ஜர் செனவிரத்ன, மொஹமட் முசம்மில், பியசிறி விஜேயநாயக்க உள்ளிட்ட 07 பேர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இதன்போது அவர்களை ஒரு லட்சம் ஷரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

சம்பூரில் 177 ஏக்கர் காணியை பொதுமக்களிடம் கையளிக்க நடவடிக்கை-

sampoor (2)திருகோணமலை சம்பூரில் கடற்படையினர் நிலைகொண்டிருந்த மீள்குடியேற்றக் கிராமத்திற்குச் சொந்தமான 177 ஏக்கர் காணியை பொதுமக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காணியை மக்களிடம் கையளிப்பதற்கான வைபவம் எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக திருமலை மாவட்ட செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. காணியை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த 237 ஏக்கரில் 60 ஏக்கர் காணி ஏற்கனவே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். அத்துடன் அந்தப் பகுதியிலிருந்த சம்பூர் மகா வித்தியாலயமும் புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்கக்கூடிய நிலையில் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கூறியுள்ளார். 2006ஆம் ஆண்டில் சம்பூரிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் அந்த காணிகள் மீண்டும் மக்களுக்கு கையளிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்திற்கான மற்றுமொரு காணாமற்போனோர் சாட்சி விசாரணை-

missingகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட பகுதிக்கான மற்றுமொரு கட்ட சாட்சி விசாரணை எதிர்வரும் 25 ஆம்திகதி ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்த சாட்சி விசாரணைக அமர்வுகளை நடத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டுள்ளார். இதன் பிரகாரம் எதிர்வரும் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், 28 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்திலும், 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வ்வுனியா பிரதேச செயலகத்திலும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை குறித்து சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன. இந்த அமர்வுகளின்போது காணாமல் போனோர் தொடர்பில் புதிய முறைப்பாடுகளையும் முன்வைக்க முடியுமென அந்த ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார். 27ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள அமர்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு மக்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இம்மாதம் முதலாம் திகதி வரை பொதுமக்களிடமிருந்து சுமார் 19 ஆயிரத்து ஆறு முறைப்பாடுகளும், பாதுகாப்புத் தரப்பில் காணாமற்போனோர் தொடர்பில் சுமார் ஐயாயிரம் முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கிளிநொச்சியில் 3 மாணவர்களைக் காணவில்லை-

missingகிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவரைக் காணவில்லை என, அம்மாணவர்களது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றுக்காலை பாடசாலைக்குச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களும், நேற்றுமாலை வரை வீடு திரும்பவில்லை.

பெற்றோர் மற்றும் உறவினர்களால் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்தே, சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பரந்தன் 11ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த தம்பிராசா ராகுலன், பிரபாகரன் பிரவீன், இந்திரன் இறைவாணன் ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள், தரம் ஒன்பது மற்றும் தரம் பத்தில் கல்வி கற்கின்ற 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் விபத்தில் இருவர் காயம்-

xcxcxcமன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிசாலை 5.45அளவில் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேட்டையார் முறிப்பு பிரதான வீதியில் இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம், வேட்டையார் முறிப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள மதகுடன் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளை அலுவலக சாரதி மற்றும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மன்னார் போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.