Header image alt text

தமிழினத்தின் முதல் அரசியில் பெண்மணி மங்கையம்மா-

mangayatkarasi amirthalingamஅமரர் திருமதி மங்கயர்க்கரசி. அமித்தலிங்கம் அவர்களின் மறைவு இலங்கை வாழ் தமிழினத்திற்கு மட்டும் அல்ல உலக தமிழ் இனத்திற்கே பேரிழப்பாகும். எமது பிரதேசத்தை சேர்ந்த இவ் உயரிய வீர மங்கை அவர்களின் இழப்பு என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் குறிப்பிட்டு விட முடியாது.

தானைத் தளபதி தமிழ் மக்களது தளபதி எதிர்கட்சித்தலைவர் போன்ற மிக முக்கியமான பதவிகளில் தன் இல்லறத்தான் பதவிகள் பல அலங்கரித்த வேளையில் நல்லதோர் மனையாளாக நல்லதோர் பக்கதுனையாக அரசியல் மேடைகளிலும் வாழ்வியலிலும் உழைத்தது மட்டுமல்ல அக்காலத்தில் பல புரட்சிப்பாடல்கள் மூலம் ஈழ விடுதலை நோக்கிய பயணத்தில் இளம் தலை முறை பயணித்திட தழிழ்தேசியம் வீறு கொண்டு எழுந்திட உழைத்த தமிழினத்தின் முதல் அரசியில் பெண்மணி திருமதி மங்கயர்க்கரசி அமிர்தலிங்கம். Read more

முன்னாள் எம்.பி ரவிராஜ் கொலைவழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்-

ravirajமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற, நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

வழக்கின் ஆரம்ப கட்ட சாட்சி விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் திலன கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக தெரியவருவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும் கொழும்பு மேலதிக நீதவான் திலன கமகே சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் வழமைக்கு திரும்பியது-

nuraicholaiநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் நேற்று இரவு முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து சுமார் 50-60 வரையினால் மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும்

இன்று எந்தவொரு இடத்திலும் மின்சாரம் தடைப்படாது என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் மின்சார சபையின் அதிகாரிகள் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண புதிய ஆளுநர் சத்தியப் பிரமாணம்-

nilukkaமத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக உயிரிழந்ததையடுத்து,

காணப்பட்ட வெற்றிடத்துக்கு நிலுக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட குழு யாழில்
 
Australiayaஅவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்டக்சன் மற்றும் அவரது குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர்.
அதன்பின்னர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின் போது, இறுதி யுத்தத்தின் போது பொது மக்களின் இழப்பீடுகள் உட்பட வடமாகாண மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் பற்றியும் ஆராய்ந்துள்ளனர்.

நாளை வியாழக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

மன்னாரில் ஒரு கோடி 87 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

Ganjaமன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை பகுதியில் 56 வீட்டு திட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள. கடற்கரையை அண்டிய சிறு ஓடையில் நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கிராம் எடையுள்ள கேரளா கஞ்சாப் பொதிகள் நேற்று செவ்வாய்கிழமை காலை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன் பெறுமதி இலங்கை ரூபாய்களில் ஒரு கோடி 87 லட்சமம் ரூபாவாகும் 

மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து சிலாவத்துறை பகுதியில் தேடுதலை நடத்தி இக்கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். எனினும் குறித்த கஞ்சா தொடர்பாக சந்தேகத்தின்பேரில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

மட்டக்களப்பு சித்தாண்டியில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம்

studentமட்டக்களப்பு சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் புதிய அதிபரை நியமிக்குமாறு கோரி பாடசாலை நுழைவாயிலை மூடி இன்று புதன்கிழமை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையின் அதிபர் கடந்த மூன்று மாதங்களாக சுகவீன விடுமுறையில் இருப்பதால் அவருக்கு பதிலாக புதிய ஆண் அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா கூறும்போது ´சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் சுகவீனம் காரணமாக விடுமுறையில் உள்ளார். அவருக்குப் பதிலாக புதிய அதிபராக நியமிக்குமாறு ஒருவரின் பெயர் பெற்றோர்களால் முன்மொழியப்பட்டது. குறித்த நபர் இப்பாடசாலைக்கு நியமிக்க கூடிய அதிபர் தரத்தினைப் பெற்றிருக்கவில்லை. அதிபர்கள் வெற்றிடம் தொடர்பாக நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இப்பாடசாலைக்கு புதிய ஆண் அதிபர் நியமிக்கப்படுவார்´ எனக் கூறினார்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

தெஹிவளையில் மீட்கப்பட்ட சடலங்கள்; உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது

dead.bodyதெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில போதனா வைத்தியசாலையில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பதற்கு எதிர்ப்பு

parliamentஇலங்கையில் வரிகளும் பொருள் விலைகளும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் புதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் எடுக்கப்பட்டுள்ள முடிவை அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் விமர்சித்துள்ளன.

இதுவரை காலமும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அடங்கலாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபா மாதாந்த சம்பளமாக கிடைத்துவந்தது. Read more

யாழ்.பொலிஸ் தலைமையக புதிய பொறுப்பதிகாரியாக டி.டி.ரி வீரசிங்க

police ...யாழில் இடம்பெறும் வன்செயல்கள் அல்லது குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு அல்லது தகவல்கள் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்´ என யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமையை பொறுப்பேற்றுள்ள தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேர ரோந்து, விசேட குழு அமைப்பின் செயற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இதனையும் மீறி வன்செயல்கள் யாழில் இடம்பெறுகின்றன.

இவை தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு தந்தால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். நேரடியாக தகவல்களை வழங்க தயங்குபவர்கள், 071-4456499 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கலாம் என்றார்.

முன்னதாக யாழ்.பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரியாக வூட்லர் கடமையாற்றியிருந்தார். அவரின் இடத்திற்கு புதிதாக யாழ்.மாவட்ட சோகோ பிரிவு பொறுப்பதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய டி.டி.ரி வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி உண்ணாவிரதம்
 
theli2theli01நிரந்தர நியமனம் வழங்கப்படும் என எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள் என்றும் எங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை தொடரவுள்ளதாகவும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர்.

நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக்கோரி பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக இன்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களுடன் கிராமிய சுகாதார உதவியாளர்கள் 22பேர், மாநகர சபை சுகாதார தொண்டர்கள் 28 பேரும் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மேலும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என எங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்காது உடனடியாக எமக்கான நிரந்தர நியமனம் கிடைக்க வேண்டும். இல்லையேல் உண்ணாவிரதத்தை தொடருவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மியான்மரின் புதிய ஜனாதிபதியாக ஆங்சான் சூகியின் ஆதரவாளர்
 
ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Miyanmarமியான்மரில் கடந்த நவம்பர் 8ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மியான்மார் நாட்டு சட்டப்படி ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி 657 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இன்று காலை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடந்தது.

இதன்படி ஜனாதிபதி வேட்பாளராக ஆங் சான் சூகி தனது ஆதரவாளரும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை களம் இறக்கியுள்ளார். இதையடுத்து, நடைபெற்ற வாக்குப்பதிவில் ஹிதின் கியாவ் அமோக வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 652 வாக்குகளில் 360 வாக்குகளை பெற்ற ஹிதின் கியாவ் மியான்மரின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது தொண்டு நிறுவனங்கள் தொடர்பான நிதிபரிவர்த்தனைகளை இவர் மிக நேர்மையாக கையாண்டு வந்ததால், தனக்கு பதிலாக இவரை ஜனாதிபதி பதவியில் நியமிக்க ஆங் சான் சூகி விரும்பியதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணில் ஐதேக உறுப்பினர்கள் 500 பேர்

UNP PAஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள, மக்கள் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 500 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் எந்த தேவையும் தமக்கு இல்லை எனவும், கட்சியை பாதுகாப்பதே தமது தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

லஞ்ச ஊழல் தொடர்பாக பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் கைது -மலேசியா

arestdமலேசிய அரசின் நிதியில் இருந்து சுமார் 680 மில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துவரும் பிரதமர் நஜீப், கடந்த சனிக்கிழமை போர்னியோ மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியில் இருந்து வெளியேவந்தபோது, அவரை நெருங்கிய இரு நிருபர்கள், ‘உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க விரும்புகிறீர்களா?’ என கேள்வி எழுப்பினர். Read more

கடும் வெயில், பொருளாதார சிக்கல் – அல்லலுறும் மலையக மக்கள்
 
teeமலையகத்தில் கடும் வரட்சியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாத காலமாக பெருந்தோட்ட பகுதியில் கடுமையான வெயில் நிலவி வருவதோடு காலை வேளையில் கடும் பணி பொழிவும் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.

கடுமையான பணி காரணமாக அதிகமான தேயிலை செடிகள் கருகி காணப்படுவதோடு, தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சலும் குறைவடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு அதிகமான வேலை நாட்களை வழங்க முடியாத சூழ்நிலைக்கு தோட்ட நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன. Read more

தமிழகத்தில் தற்கொலை செய்த அகதி தொடர்பாக ஆராய்வு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க  அழுத்தம்.

electricதமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்தியக் குடியுரிமையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமங்கலம், உச்சம்பட்டி அகதிகள் முகாமில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் உயர்-அழுத்தம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. Read more

இலங்கையின் திடீர் மின்சாரத் தடை நாசகரச் செயல் என சந்தேகம்
 
powerஇலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது ஒரு நாசகாரச் செயற்படாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள், இரண்டு தடவை நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. Read more