Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) எட்டாவது தேசிய மாநாடு-

dplf logo smallஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) எட்டாவது தேசிய மாநாடு எதிர்வரும் 22ம் நாள் வவுனியாவில் இடம்பெறும்.

வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் சந்தியில் அமைந்துள்ள “ஆதி” திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ள இவ் மாநாட்டில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து கலந்துகொள்ளவுள்ளதோடு, அமைப்பின் சர்வதேச கிளைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் தற்கால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் மாநாட்டினை நடாத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்),
வவுனியா மாவட்ட இணைப்பாளர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
2016.05.16

தமிழக சட்டசபை தேர்தல் 2016

TamilNadu-assemblyதமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16–ந்தேதி நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால், மீதம் உள்ள 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்தனர். Read more

நிலச்சரிவில் காணாமல் போனவர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்பு குறைவு- இலங்கை ராணுவம்

malayakamஇலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக, மலையகப் பகுதியான கேகாலை மாவட்டத்தில் தொடர் மழையும் அதனை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டன. இச்சூழலில், நிலச்சரிவில் சிக்கி 134 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் தளபதி சுதாந்த ரனசிங்க பிபிசியிடம் பேசுகையில், அரநாயக்க பிரதேச நிலச்சரிவில் சிக்கி உள்ளோரை உயிருடன் மீட்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு என கூறியுள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட போது காணமல் போன 134 பேர் இந்நேரம் இறந்திருக்கலாம் என அஞ்சுகிறேன். இருந்தாலும், எங்களுடைய மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். மீட்கப்படும் சடலங்கள் உடனடியாக உரிய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். என்றார்.
மேலும், அரநாயக்க பிரதேசத்தில் இதுவரை எந்த உடல்களையும் கண்டெடுக்கவில்லை எனவும், புலத்கோபிட்டிய பிரதேசத்தில் மேலும் 5 உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புலத்கோபிட்டிய பிரதேசத்தில் 16 பேர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த பிரதேசத்தில் 10 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.

ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ள எகிப்து விமானம்
 
EgyptAir-flightபாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஈஜிட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்எஸ்804 என்ற இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 விமான பணியாளர்களும் இருந்ததாக ஈஜிப்ட் ஏர் விமான நிறுவன தகவல் மேலும் கூறியுள்ளது.

மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் 37,000 அடி (11,300 மீட்டர்) உயரத்தில், இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கெய்ரோ நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு (00:45 ஜிஎம்டி நேரம்) இந்த விமானம் ராடரின் தொடர்பை இழந்துள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலும் தகவல்கள் கிடைத்தவுடன், அது குறித்த அறிக்கையை வெளியிடுவோம் என்று ஈஜிப்ட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது