Header image alt text

தமிழ் மக்கள் பேரவையின் வரைபு நோர்வேயிடம் கையளிப்பு-

peravaiதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு உத்தியோகபூர்வமாக இன்று நோர்வே அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பேரவையின் செயற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரால் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஷொப்ஜோர்ன் கோஸ்டாட்செசரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து, நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது, நோர்வேயின் சமாதான மத்தியஸ்தம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் தமிழ் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பு குறித்து தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களால் இதன்போது நோர்வே தூதருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான இறுதித் தீர்வினைப் பெற்றுத்தரவும், இறுதி யுத்தத்தில் அரங்கேறிய மனிதப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தார்மீகப் பொறுப்பும் நோர்வே நாட்டிற்கு உள்ளதாக தமது பிரதிநிதிகள் எடுத்துக்கூறியதாக தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய குரல் எழுப்புதலுக்கு இம்முறை தமிழ் மக்கள் பக்கம் சார்ந்து நின்று, சர்வதேச விசாரணைக்கான தமது குரலைப் பலப்படுத்துமாறும் தமிழ் மக்கள் பேரவை நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் மற்றும் மாதர் சங்கங்களுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

thunukai thalapadam1முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்பவற்றுக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான 2015ஆம் ஆண்டின் மூலதன நன்கொடை நிதியிலிருந்து தளபாடங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களுடன், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசபைத் தலைவர், செயலாளர், ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

வடக்கு சமஷ்டி யோசனைக்கு மேல் மாகாண சபை எதிர்ப்பு-

peravaiவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகவும், ஏனைய மாகாணங்கள் ஏழையும் இணைத்து சிங்கள மொழியை அடிப்படையாகக் கொண்ட வேறு பிராந்தியமாகவும் நிர்வகிக்கவேண்டும் என்று வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானத்தை, மேல் மாகாண சபை ஏகமனதாக நிராகரித்துள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஒன்றிணைந்து, அவைக்கு நடுவே நேற்று அமர்ந்திருந்து, வடமாகாண சபையின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க, இந்த நிராகரிப்பு யோசனையை முன்வைத்தார். அதனை, ஐ.தே.கட்சி உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா வழிமொழிந்தார்.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்-

aarpattam (2)நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பல வருடங்களாக ஊதியமின்றி பணியாற்றிவரும் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், நிரந்தர நியமனம் கோரி 11ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர் ஆசிரியர்கள், ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகள் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனையடுத்து மீண்டும் மாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக சென்ற கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

வட்டுவாகல் சப்த கன்னிகள் ஆலய இராஜகோபுர அடிக்கல் நாட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
vaddu.4JPGமுல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்த கன்னிகள் ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது அந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து கொண்டிருந்தார். 
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த அடிக்கல் நாட்டு விழாவின்போது சப்த கன்னிகள் ஆலபத்தில் புராதனகால கலைவண்ணத்துடன் கூடிய மண்குடம் ஒன்று பன்னிரெண்டு அடி ஆழத்துக்கும் அப்பால் கண்டு எடுக்கப்பட்டிருந்தது. இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை-

parliamentபாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பாலித்த தேவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக மேற்கொள்ளக் கூடிய, உயரிய ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலர் கூச்சலிட்டமையால், பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இதேவேளை, இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் தொடர்ந்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால் அதனை இன்றுவரை ஒத்திவைப்பதாகவும், இந்த சம்பவத்தை தான் கண்டிப்பதாகவும் சபாநாயகர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

குமுழமுனையில் வேள்ட்விஷன் நிறுவனத்தாரின் கௌரவிப்பு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
world vision.4JPGமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குமுழமுனை கிராமத்தில் வேள்ட்விசன் நிறுவனத்தினர் முதியவர்களை கௌரவித்தல், பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்களை கௌரவித்தல் மற்றும் வன்னி மேம்பாட்டுப் பேரவையினால் இரண்டு மாணவர்களுக்கு கணனி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோது, 
கரைதுறைபற்று பிரதேச செயலாளர் கரைதுறைபற்று உதவிப் பிரதேச செயலாளர் வேள்விசன் நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் குமுழமுனை பிரதேச வைத்தியர் கிராமசேவகர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயலாளர் ஆகியோரும் அதிதிகளாக கலந்துகொன்டிருந்தனர். மேற்படி பொதுநோக்கு மண்டபத்துக்கான மின் இணைப்பு மற்றும் மின் உபகரணங்களையும் மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் வழங்கி வைத்தார்.

Read more