சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி, 11 பேரைக் காணவில்லை-
 சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம், சபைத் தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில், நேற்று இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில், 63 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. அதில், கேகாலை மாவட்டத்தில் உள்ள 3 பாடசாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அப்பாடசாலைகளை அவ்விடத்திலிருந்து முழுமையாக அகற்றி, வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தந்தையார் காலமானார்-
 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம், இன்று புதன்கிழமை காலமானார். மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார். நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளையின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார். மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர், இறுதி யுத்தத்தின்போது குடும்பத்தினருடன் முள்ளிவாய்க்கால் ஊடாக வெளியேறி ஐரோப்பாவில் சிறிது காலம் வாழ்ந்தார். மீண்டும் தாயகம் திரும்பிய இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 78ஆவது வயதில் காலமாகினார். அன்னாரது இறுதிக் கிரிகைகள் அவரது சொந்த இடமான வட்டக்கச்சியில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அராலி கிணற்றிலிருந்து மாணவனின்சடலம் மீட்பு-
 யாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து நேற்றுமாலை, 16 வயது மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த, அராலி தெற்கைச் சேர்ந்த ஜெ.ஜெசிந்தன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இம்மாணவன், கடந்த 23 ஆம் திகதி வீட்டைவிட்டுச் சென்றிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரநாயக்க பகுதிக்கு அமெரிக்க தூதுவர் விஜயம்-
 இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உட்பட ஒரு குழுவினர் இன்று காலை அரநாயக்க பகுதியிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபையின் உறுப்பினரான பய்சல் முஸ்தப்பா மற்றும் பேரிடர் அபாய குறைப்பு தெற்காசிய பிராந்திய ஆலோசகர் டாக்டர் மைக்கல் ஜே அர்னஸ்ட் போன்ற உறுப்பினர்களும் சென்றுள்ளனர். அமெரிக்கா அரயாக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கிய நன்கொடையை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே இவ்வாறானதொரு விஜயத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
பெல் 206 ரக ஹெலிகொப்டர் விபத்து-
 ஹிங்குராங்கொட விமானப்படை தலைமையகத்தில், விமானப்படை அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெல் 206 ரக ஹெலிகொப்டர், விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும், ஹெலிகொப்டருக்கு ஏற்பட்ட சேதங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் விமானப்படை ஊடகப்பேச்சாளர் குஷரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பயிற்சியில் ஈடுபட்ட விமானிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.