வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுளியங்குளம், புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் இந்த கையேடுகள் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாம் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் உடனிருப்போம், நாம் மக்களின் எதிரியல்ல, எந்தவொரு நேரத்திலும் வவுனியா நகரத்தின் பல இடங்களில் எமது உறுப்பினர்கள் இருப்பார்கள் என்ற வாசகங்கள் அந்த துண்டுப் பிரசுரங்களில் இருந்துள்ளன. Read more
யாழ்ப்பாணத்திலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த தனியார் பேருந்து பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளனர்.
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பில், சதித்திட்டம் தீட்டியமை, நிதியுதவி வழங்கினார்கள் என குற்றஞ்சமத்தப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளதுடன், இதனை 5 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் செயலாளர்களாக 75 சதவீதம் கடமையாற்றுபவர்கள் குறிப்பிட்ட அமைச்சர்களின் உறவினர்கள் என அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.