 கோப்பாய் தொகுதிக்கான கிராமிய அபிவிருத்தி மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றுமாலை 4.30 மணியளவில் யாழ். ஊரெழு மேற்கு திலீபன் வீதியில் அமைந்துள்ள பாரதி சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்றது.

வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் சி. அகீபன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர்கள் அ.பரஞ்சோதி, பா. கஜதீபன், யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த், வலிகிழக்கு பிரதேசசபைத் தலைவர் தி.நிரோஸ், பிரதேசசபை உறுப்பினர்கள் இரா.செல்வராஜா, சு.சிவபாலன், ச.ரேணுகா மற்றும், சி.முகுந்தன், கிசோர், ஊரெழு கணேசா வித்தியாசாலை அதிபர் அன்ரன் பிறேம்ராஜ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more
 
		     யாழ். இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயத்தின் தேசிய வெற்றியார்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றுமுற்பகல் வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்தியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அருட்பணி யேசுரெட்ணம் அடிகளாரின் ஆசியுரையுடன் ஆரம்பமானது.