 யாழ். சுன்னாகம் மேற்கு கலைவாணி சனசமூக நிலையக் கட்டிடத்தினை பூரணப்படுத்துவதற்கான வேலைகள் இன்று (11.10.2018) வியாழக்கிழமை காலை 8.00மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன. மேற்படி சனசமூக நிலையத்திற்கான முதற்கட்ட வேலைகள் ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பதாக நடைபெற்றிருந்தது. அதன்பிறகு அதன் மிகுதி வேலைகள் நடைபெறாதிருந்தன.

இந்நிலையில் நிறைவுபெறாதுள்ள சனசமூக நிலையக் கட்டிடத்தினை பூரணப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து 5லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார். இதன்கீழ் இன்று கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more
 
		     யாழ். சுன்னாகம் கந்தரோடையில் அமைந்துள்ள யா.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் வைஸர் சிவசுப்பிரமணியம் அவர்களின் 22ஆவது ஆண்டு நினைவுப்பேருரை வைபவம் நேற்று (10.10.2018) புதன்கிழமை முற்பகல் 9.30அளவில் கல்லூரியின் அதிபர் மு.செல்வஸ்தான் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கந்தையா உபாத்தியாயர் மண்டபத்தில் இடம்பெற்றது.