 சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 
இதன்போது உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும், தொடர்ந்து 29நாட்களாக அவர்கள் உண்ணாவிரதமிருப்பதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நிரந்தர உடல் பாதிப்புகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அரசியல் கைதிகளிடம் போதகர் சக்திவேல் அவர்களின் ஊடாக கேட்பதோடு, வெளியே இருக்கக்கூடிய சிவில் சமூகம் அவர்களின் சார்பில் இப்போராட்டத்தை முன்னெடுத்து அவர்களின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது. Read more
 
		     புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 2.15மணியளவில் யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள வட்டு சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 2.15மணியளவில் யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள வட்டு சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.  யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யா.வட்டு கார்த்திகேய வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 1.45மணியளவில் பல் ஊடக எயிறி (multimedia Projector) உள்ளிட்ட உபகரணங்களை பாடசாலை சமூகத்திடம் கையளித்துள்ளார்.
யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யா.வட்டு கார்த்திகேய வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 1.45மணியளவில் பல் ஊடக எயிறி (multimedia Projector) உள்ளிட்ட உபகரணங்களை பாடசாலை சமூகத்திடம் கையளித்துள்ளார்.