ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுமாலை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகம், அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்துள்ளனர். Read more
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் என்பனவற்றை விடுவிப்பதற்கு, காலவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரதூரமான மனித படுகொலைகளை செய்தவர்களையும் அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் என கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள, எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சலையில் இல்லை.