 வைத்தியக்கலாநிதி இராஜதுரை தர்மராஜா அவர்கள் நேற்று (12.01.2019) காலை கொழும்பில் காலமானர் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
வைத்தியக்கலாநிதி இராஜதுரை தர்மராஜா அவர்கள் நேற்று (12.01.2019) காலை கொழும்பில் காலமானர் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். 
அன்னார் பொதுவுடமைவாதியும், காந்தீயம் அமைப்பின் செயலரும், ஆசிரியரும், கழகத்தின் மூத்த தளபதியும், கழகத்தின் திருமலை மாவட்ட அமைப்பாளருமான அமரர் தோழர் ஜெயச்சந்திரன் (பார்த்தன்) அவர்களின் சகோதரராவார். அவர்தம் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு: அன்னாரின் பூதவுடல் இன்றுகாலை 10மணிமுதல் கொழும்பு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை மாலை 4மணிக்கு இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக கல்கிசை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. தொடர்புகட்கு (மகன் முரளி 0710694930).
