வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதிவுசெய்து தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்குவதற்கு மேற்கொண்டுள்ள அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாக சபையினரும், சமளங்குளம் கிராம மக்களும் இன்று (22.01.2019) செவ்வாய்க்கிழமை புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைச் சந்தித்து உரையாடியதுடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.
ஆலயத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம்(மோகன்)-கட்சியின் உபதலைவர், வவுனியா நகரசபை உறுப்பினர்), சு.காண்டீபன்-வவுனியா நகரசபை உறுப்பினர்), த.யோகராஜா-கட்சியின் தேசிய அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more
வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து இன்று (22) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தின் தைப்பூச நிகழ்வு ஆலயத்தின் தலைவர் திரு .மாதவன் அவர்களின் தலைமையில் (21.01.2019) இன்று நடைபெற்றது .