 திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், பின்னாளில் டென்மார்க்கில் வசித்து வந்தவருமாகிய திரு. அருணாசலம் குமாரதுரை அவர்கள் இயற்கை எய்தியதையிட்டு ஆழந்த துயரும், வேதனையும் அடைகின்றோம்.
திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், பின்னாளில் டென்மார்க்கில் வசித்து வந்தவருமாகிய திரு. அருணாசலம் குமாரதுரை அவர்கள் இயற்கை எய்தியதையிட்டு ஆழந்த துயரும், வேதனையும் அடைகின்றோம்.
அன்னார், தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தலைவரும் அனைவராலும் மதிக்கப்பட்டவருமான திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.
மிகத் தீவிர தமிழ்த் தேசியவாதியாகவும், தமிழ்இனப் பற்றாளராகவும் திகழ்ந்த குமாரதுரை அண்ணர் அவரது துணிச்சல் மிக்க செயற்பாடுகளினால் மக்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்பட்டவர். விடுதலைப்போராட்ட காலத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்காளானதுடன் மூன்று வருடங்களுக்குமேல் சிறைவாசம் அனுபவித்திருந்தார். Read more
 
		     பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அப்பதவியல் இருந்து அகற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அப்பதவியல் இருந்து அகற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.  யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று பெரும் எதிர்ப்பைத் தெரிவித்ததை தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.
யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று பெரும் எதிர்ப்பைத் தெரிவித்ததை தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.  மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இராணுவ வீரர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இராணுவ வீரர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.