 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களுக்கான உதவியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களுக்கான உதவியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 
இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்களின் இந்த நிதியுதவியினை நேற்றுமுன்தினம் (01.02.2019) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளரும், வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான க.சிவநேசன்(பவன்) அவர்கள் வழங்கிவைத்தார். கிராஞ்சி அ.த.க பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொடையாளி த.நாகராஜா, கட்சியின் தேசிய அமைப்பாளர் த.யோகராஜா(யோகன்)பிரதேச சபை உறுப்பினர்), கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் வே.சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன், தொண்டர் அமைப்பின் பிரதிநிதி யசோதரன், வேரவில், கிராஞ்சி பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். 
 Read more
 
		     வவுனியா பொன்னாவரசன்குளம் கிராமத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 70 பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்றுமுன்தினம் (31.01.2019) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பொன்னாவரசன்குளம் கிராமத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 70 பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்றுமுன்தினம் (31.01.2019) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.  வவுனியா பொன்னாவரசன்குளம் வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த வலுக்குன்றிய குழந்தையொன்றின் தாயாரான சிவராசா தயாநிதி என்பவருக்கு முதற்கட்டமாக 5ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்ததோடு, மாதாந்தம் அவருக்கான மேற்படி நிதியுதவியைத் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொன்னாவரசன்குளம் வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த வலுக்குன்றிய குழந்தையொன்றின் தாயாரான சிவராசா தயாநிதி என்பவருக்கு முதற்கட்டமாக 5ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்ததோடு, மாதாந்தம் அவருக்கான மேற்படி நிதியுதவியைத் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.  யாழ். இளவாலை உயரப்புலம் ஸ்ரீமுருகன் முன்பள்ளியில் 2019ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா 28-01-2019 அன்று இடம்பெற்றபோது புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவம் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினரான எஸ்.கே.அச்சுதபாயன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவூம் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ். இளவாலை உயரப்புலம் ஸ்ரீமுருகன் முன்பள்ளியில் 2019ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா 28-01-2019 அன்று இடம்பெற்றபோது புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவம் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினரான எஸ்.கே.அச்சுதபாயன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவூம் கலந்துகொண்டிருந்தனர்.  யாழ். கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 30-01-2019 அன்று இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் திரு.அ.ஆனந்தராசா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும்,
யாழ். கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 30-01-2019 அன்று இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் திரு.அ.ஆனந்தராசா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும்,  இலங்கை இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவிற்கு எதிரான பிடியாணையை பிரிட்டனின் நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.
இலங்கை இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவிற்கு எதிரான பிடியாணையை பிரிட்டனின் நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.  இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது.
இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது.  யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  மன்னார் – பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பறை கூடம், இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம், இன்றுகாலை 8 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தை திறந்த போது, தீப்பற்றி எரிவதைக் கண்ட நிலையில், உடனடியாகத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மன்னார் – பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பறை கூடம், இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம், இன்றுகாலை 8 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தை திறந்த போது, தீப்பற்றி எரிவதைக் கண்ட நிலையில், உடனடியாகத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிரான இலங்கை சுங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து இடம்பெறுகின்றது.
இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிரான இலங்கை சுங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து இடம்பெறுகின்றது.