புதியபாதை ‘ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 38வது நினைவுதினம் இன்றாகும்.
1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலைப் புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும்.
தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் ‘புதியபாதை’ ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி. Read more
வடமாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநர் திருமதி.பி.எம்.எஸ் சார்ல்ஸ் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இன்று பிற்பகல் 1மணியளவில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்தன தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் நேற்று இந்நிகழ்வு நடைபெற்றது.
அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடக பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்தி கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான ‘இனியபாரதி’ என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரை, இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி.சிவகுமார் உத்தரவிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த அரசியலமைப்பின் 21ஆம் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில்,