கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் வெளிநாடு செல்ல தடை விதித்தும் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடு செல்வதற்கு நீதவான் எச்.யு.கே. பெல்பொல தடை விதித்துள்ளார். Read more
இலங்கையின் புதிய வீதி வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி. சங்கக்கார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்றுமுற்பகல் கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஐ.எஸ்.எஸ் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள், காந்திப்பூங்காவில் நேற்று ஒன்றுகூடி விரைவாக தமக்கான நியமனத்தைத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ். அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.