அதிக விலையில் முக கவசம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக விலையில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (290 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோது பொதுமக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Read more
கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்ப்பதற்காக நிறுவனங்களில் முறையான வேலைத்திட்டங்களை ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துறைமுக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் இருந்து இதுவரை 488 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.