Header image alt text

பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவின் அழைப்பிற்கு அமைய இலங்கை விஜயம் மேற்கொள்ளும் அவர் 5 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க உள்ளார். இதன்போது, கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியனவற்றின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை, பாகிஸ்தானின் கடற்படை தளபதி சந்திக்கவுள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியுமான சானி அபேசேகரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடத்திய தொலைப்பேசி உரையாடல்கள் குறித்து விசாரணை நடத்தி அது குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவிற்கு கடந்த எழாம் திகதி உத்தரவிட்டது. Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன, அரசியலில் ஏற்பட்ட விரக்தி காரணமாகவே தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அவர், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதத்தை கையளித்திருந்தார். Read more

முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக பிரிந்திருந்த மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவனே மனைவியை குத்தி கொலைசெய்துவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா, கற்பகபுரம் பகுதியில் நேற்றுக்காலை தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா என்பவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததுடன் இரவு 9.00 மணியளவில் எம்முடன் ஒன்றாக இருந்து உணவருந்தினார். Read more

நல்லாட்சியின் நான்கரை வருட காலப்பகுதியில் எந்தவொரு ஊடகவியலாளரும் நாட்டை விட்டுச் செல்லவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, இந்த அரசாங்கம் பதவியேற்று 60 நாள்களில் ஊடகத்துறையுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

முதல் முறையாக இலங்கையில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் இன்றையதினம் திறக்கப்படவுள்ளது.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடத்தின் அனுசரணையில் இந்த மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். Read more

கடந்த இரண்டு நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள், இன்று தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த பணி புறக்கணிப்பில் இன்றைய தினம்வரை தமக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியைக் கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவரது கணவரை, பெப்ரவரி 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல், இன்று உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொல்லப்பட்ட மாணவியின் தாயாரும் சகோதரியும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர். Read more