ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் மார்ச் 20 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். Read more
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில், நேற்றிரவு 8.30மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரில் எதிர்வரும் 25ம் திகதி (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் காலை முதல் மன்னார் நகர சபை முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.