Header image alt text

கூட்டமைப்பாக கட்சிகள் இணைந்திருப்பது ஆசனங்களைப் பெற அல்லவென்றும் தமிழ் மக்களின்  அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

கேள்வி: பாராளுமன்றத் தேர்தலொன்று அறிவிக்கப்பட உள்ளதே?

பதில் – பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய திகதிகள் குறித்து தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்தத் தேர்தல் இன்னும் சில காலம் பின்னுக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சில கதைகள் உள்ளன.

Read more

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 70 புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. Read more

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பொது தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி கலைக்கப்படுவதோடு எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பொதுத் தேர்தலுக்கு 500 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இதுவரை காலமும் குறிப்பிட்ட சில தினங்கள் மாத்திரம் இந்தியாவிற்கான விமான சேவை இயங்கி வந்த நிலையில் எதிர்வரும் 27ம் திகதி முதல் நாளாந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கமைய கால நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் யாழ் வர்த்தக சங்க உப தலைவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். Read more

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பிரதம அதிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். Read more

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2442 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. Read more

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பகுதிகளுக்கு முப்படையினரை அனுப்புவது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், Read more

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வரை பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணத்தை அறவிடுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வீதி மற்றும் பெருந்தெருக்கல் அமைச்சு இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவை முதல் மத்தள வரையான சுமார் 200 கிலோ மீற்றர் பகுதியில் வாகன போக்குவரத்திற்காக கட்டணம் அறவிடப்படவுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 4 பேர் அங்கொட தொற்று நோய் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மற்றும் ஒருவர் குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினமான 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது. http://www.ketheeswaram.com/  என்பது இதன் முகவரி ஆகும்.

இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளலாம். அன்னதானம் வழங்குவதற்கு முற்பதிவு மேற்கொள்ளலாம். நன்கொடைகள் வழங்கலாம். இ ரிக்கற் ஊடாக அர்ச்சனை செய்யலாம். ஆலயத்துடன் தொடர்புடைய படங்கள் நூல்கள் இலக்கியங்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. Read more