கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குறித்த நபருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வெலிசறை கடற்படை முகாமை மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெலிசறை கடற்படைத்தளம் மூடப்பட்டது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 26 பேர், இன்று குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1472 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஒரே மாதத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் அகால மரணம் அடைந்திருப்பது யாழ். மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமையின் முகாமைத்துவத்திற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கைப்பேசி செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால் இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.