கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(04) அடையாளம் காணப்பட்ட 468 பேர், நாட்டின் 22 மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களிடையே அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 183 பேர் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 82 பேர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கண்டியில் 73 பேரும், கம்பஹாவில் 72 பேரும், குருநாகலில் 28 பேரும், பொலன்னறுவையில் 19 பேரும், ஹம்பாந்தோட்டையில் 12 பேரும்,

காலியில் 12 பேரும், களுத்துறையில் 11 பேரும், மாத்தறையில் 10 பேரும், திருகோணமலையில் 08 பேரும், நுவரெலியாவில் 07 பேரும், அம்பாறையில் 07 பேரும், மட்டக்களப்பில் 06 பேரும், யாழ்ப்பாணத்தில் 06 பேரும், அநுராதபுரத்தில் 03 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் தலா ஒருவர், இருவர் என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.