வவுனியாவில் திடிரென அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது. Read more
நேற்றைய தினம் (11) மேலும் 08 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (11) முதல் இன்று (12) காலை வரையில் நாட்டில் புதிதாக 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற பணிக்குழாம் அங்கத்தவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படும் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தல் முறைமையை மீள்பரிசீலனை செய்வதற்காக மூவர் அடங்கிய குழுவை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் நியமித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் 158 வது பிறந்ததினம் இன்று (12) உலகில் பல இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் எமது நாட்டின் பல பாகங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.