நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்றுக் காலை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி

பாதுகாப்பு தரப்பின் தடைகளையும் தாண்டி முன்னேறி தாழங்குடாவில் தரித்து நின்றதுடன் இன்று காலை 8.30மணிக்கு மீண்டும் ஆரம்பித்து மட்டக்களப்பு நகரை அடைந்து திருகோணமலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

தாழங்குடாவில் பேரணி ஆரம்பமானபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சூட்டி, கட்சியின் உபதலைவர்களில் ஒருவரான கேசவன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ராகவன் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலரும் பேரணியில் இணைந்து  கொண்டிருந்தார்கள்.