27 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாட்டு விலைகள் திங்கட்கிழமை (08) முதல்  3 மாத காலத்தில் செலுப்படியாகும் என, வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்களை சதொச, கூட்டுறவு நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையின் கீழ் கொள்வனவு செய்ய முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட பொருட்களின் விவரம்

01.சிவப்பு பச்சை அரிசி 1 கிலோகிராம் – (புதிய விலை) 93 ரூபாய் – (பழைய விலை) 106 ரூபாய்

02.வெள்ளை பச்சை அரிசி 1 கிலோகிராம் (புதிய விலை) 93 ரூபாய்  – (பழைய விலை) 105 ரூபாய்

03.வெள்ளை நாடு 1 கிலோகிராம் (புதிய விலை) 96 ரூபாய் – (பழைய விலை) 109 ரூபாய்

04.சம்பா 1 கிலோகிராம் (புதிய விலை) 99 ரூபாய்  – (பழைய விலை) 120 ரூபாய்

05.கீரி சம்பா 1 கிலோகிராம் (புதிய விலை) 125 ரூபாய் – (பழைய விலை) 140 ரூபாய்

06.கோதுமை மா 1 கிலோகிராம் (புதிய விலை) 84 ரூபாய் – (பழைய விலை) 105 ரூபாய்

07.வெள்ளை சீனி 1 கிலோகிராம் (புதிய விலை) 84 ரூபாய் – (பழைய விலை) 105 ரூபாய்

08.சிவப்பு சீனி 1 கிலோகிராம் (புதிய விலை) 99 ரூபாய் – (பழைய விலை) 110 ரூபாய்

09.தேயிலை தூள் (100கிராம்) (புதிய விலை) 95 ரூபாய் – (பழைய விலை) 130 ரூபாய்

10.சிவப்பு பருப்பு (அவுஸ்திரேலியா) 1 கிலோகிராம் (புதிய விலை) 165 ரூபாய் – (பழைய விலை) 188 ரூபாய்

11.பெரிய வெங்காயம் (இந்தியா) 1 கிலோகிராம் (புதிய விலை) 120 ரூபாய் – (பழைய விலை) 140 ரூபாய்

12.உள்நாட்டு உருளைகிழங்கு 1 கிலோகிராம் (புதிய விலை) 180 ரூபாய் – (பழைய விலை) 216 – 220 ரூபாய்

13.பாகிஸ்தான் உருளைகிழங்கு 1 கிலோகிராம் (புதிய விலை) 140 ரூபாய் – (பழைய விலை) 190 ரூபாய்

14.கடலை ஒரு கிலோகிராம் (புதிய விலை) 175 ரூபாய் – (பழைய விலை) 225 ரூபாய்

15.காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் (புதிய விலை) 495 ரூபாய் – (பழைய விலை) 550 ரூபாய்

16.உள்நாட்டு ரின் மீன் 425 கிராம் (புதிய விலை) 220 ரூபாய் – (பழைய விலை) 240 ரூபாய்

17.இறக்குமதி செய்யப்படும் ரின் மீன் 425 கிராம் (புதிய விலை) 265 ரூபாய் – (பழைய விலை) 280 ரூபாய்

18.நெத்தலி மீன் 1 கிலோகிராம் (புதிய விலை) 545 ரூபாய் – (பழைய விலை) 700 ரூபாய்

19.தோலுடனான கோழி இறைச்சி (புதிய விலை) 400 ரூபாய் – (பழைய விலை) 430 ரூபாய்

20.கட்டி உப்பு 1 கிலோகிராம் (புதிய விலை) 43 ரூபாய் – (பழைய விலை) 55 ரூபாய்

21.பால் மா 400கிராம் (புதிய விலை) 355 ரூபா – (பழைய விலை) 380 ரூபா

22.சோயா எண்ணெய் 500 மில்லிலீற்றர் (புதிய விலை) 310 ரூபா – (பழைய விலை) 470 ரூபா

23.ஆடைகளை கழுவும் சவற்காரம் (பீசீசீ) 115கிராம் (புதிய விலை) 43 ரூபாய் – (பழைய விலை) 53 ரூபாய்

24.ஆடைகளை கழுவும் சவற்காரம் 650 கிராம் (புதிய விலை) 260 ரூபாய் – (பழைய விலை) 325 ரூபாய்

25.வாசனை சவற்காரம் 100கிராம் ஆடைகளை கழுவும் சவற்காரம் (பீசீசீ) 115கிராம் (புதிய விலை) 56 ரூபாய் – (பழைய விலை) 63 ரூபாய்

26.கைகளை கழுவும் திரவம் 100 மில்லிலீற்றர் ஆடைகளை கழுவும் சவற்காரம் (பீசீசீ) 115கிராம் (புதிய விலை) 250 ரூபாய் – (பழைய விலை) 350 ரூபாய்

27.முகக்கவசம் (எஸ்.எல்.எல் தரச்சான்றிதழ்) ஆடைகளை கழுவும் சவற்காரம் (பீசீசீ) 115கிராம் (புதிய விலை) 14 ரூபாய் – (பழைய விலை) 25 ரூபாய்