நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பினரது பல தடைகளையும் தாண்டி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் முல்லைத்தீவு சென்று அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியபின் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் நெடுங்கேணி ஊடாக வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு அண்மையாக நேற்றிரவு நிறைவடைந்தது.

கொக்கிளாய் வீதி வேம்படிச்  சந்தியில் பேரணி சென்றபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் கவாஸ்கர் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், ஜூட்சன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் பலரும் பேரணியில் இணைந்து கொண்டிருந்தார்கள்.

அத்துடன் பேரணி நெடுங்கேணியை அடைந்தபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உபதலைவர்களுள் ஒருவரான ஜி.ரி லிங்கநாதன்(விசு) உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலரும் பேரணியில் இணைந்து கொண்டிருந்தார்கள்.