முல்லைத்தீவு தண்ணீறூற்று, குருந்தூர் மலையில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின் போதே இவை மீட்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அநுர மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என அவர் கூறியுள்ளார்.

அங்கு பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய, கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அகழ்வுப் பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு செய்யப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அநுர மனதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.