வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (20) தீச்சட்டிப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடைகளை அணிந்து சர்வதேசமே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்து என்ற பிரதான கோசமாக முன்வைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இப்போராட்டமானது  கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் வரை சென்றடைந்தது.

வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி
மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்ப போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன்
நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்  தீச்சட்டி
போராட்டத்தை  முன்னெடுத்திருந்தனர்