Header image alt text

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64 பேரையும் எதிர்வரும் 17 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எழுத்து மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் களுவாஞ்சிக்குடி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் மேலதிக நீதவானுமான கருப்பையா ஜீவராணி இன்று (04) உத்தரவிட்டார். Read more

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2021 மே 18ஆம்  திகதி சமர்ப்பிக்கப்பட்ட   தீர்மானம்
குறித்து  வெளிநாட்டு  அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இந்தத் தீர்மானம்   வெளிநாட்டு  விவகாரங்கள்  தொடர்பான  சபைக் குழுவுக்கு அன்றைய தினமே  பரிந்துரைக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் மே மாதம் 21ஆம் திகதி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை கண்காணிப்பதற்காக குற்ற விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று இன்று, சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது. Read more

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடளாவிய ரீதியில் தாதியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் தாதியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர். Read more

யாழ். மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். Read more

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், அவர் இன்று (03) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில், தீப்பற்றி எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல்
கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், அக்கப்பல் ஏற்றிவந்த
அபாயகரமான இராசயனங்களின் பட்டியலை சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய
நிலையம் வெளியிட்டுள்ளது. Read more

மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு, புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வந்தவர்களால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன், இன்று (03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more