எதிர்வரும் 3 வருடங்களில் லயக்குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பெஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று, அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்கமைய, லயக்குடியிருப்புகளை 3 வருடங்களில் அகற்றி, தனி வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.