ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொதுச்செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் 31ஆம் நாள் நினைவாக புளொட் சுவிஸ் தோழர்கள் ஜெகன், குமார், ஆனந்தன், வரதன், சிவா ஆகியோரின் அனுசரணையில் மாங்குளத்தில் அமைந்துள்ள நல்லாயர் சிறுமியர் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்கு இன்று மதியநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது. Read more
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 12 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,127 ஆக அதிகரித்துள்ளது.
கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் இச்செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று (20) யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அண்மையில், தரம் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளும் 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
லண்டனின் தென்கிழக்கு பகுதியில் Bexleyheath நகரில் ஹெமில்டன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பரவிய தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கையர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நால்வரும் திருகோணமலை – உவர்மலையை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.