சுன்னாகம் தபாலக கட்டிட பணி முடிவடைந்து விட்டதாக முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அமைச்சிற்கு அறிவித்துள்ளார். அதே வேலைத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய அரச அதிபர் க.மகேசனால், ஒப்பந்தக்காரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிற்கு சேர வேண்டிய அபிவிருத்தி திட்ட பணத்தை வீணாக்கும் அரச அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29.11.1985 அன்று திருவையாறில் மரணித்த தோழர்கள் சின்ன நியாஸ் (நா.பாலசந்திரன் – வட்டகச்சி), ஐவன் (மகாலிங்கம் – கனகபுரம்) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
நாட்டில் மேலும் 541 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 563,061 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.