நாளை (12.02.2022 ) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவிருந்த தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்களும்; அரசியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளும் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் 16.02.2022ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்..
வவுனியா பல்கலைக்கழகமூடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.. வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் போலியான ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பில் இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் உயர் ஸ்தானிகராலயம் தனது ஒரு ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,
இலங்கையர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை தவிர்க்க போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டாக்டர் அன்வர் ஹம்தானி,
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் இவர் செயற்பட்டிருந்தார். அத்தோடு, கம்போடியா அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.