செலுத்த வேண்டிய தண்டப்பணத்தை விரைவில் செலுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 08 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலத்தின் போது தோல்வியடைந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து குறித்த 08 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை வௌியேறவில்லை என பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read more
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (06) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார். பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடம் கொண்ட திரு. முருகுப்பிள்ளை நல்லதம்பி (நல்லதம்பி அண்ணர்) அவர்கள் நேற்று (04.02.2022) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தில், இராணுவ மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகளின் குழுக்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி. அம்பிகா சற்குணநாதனின் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.
04.02.1993 இல் தரவன்கோட்டையில் மரணித்த தோழர் ராஜூ (இ.கனகரத்தினம் – கண்டி), அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுகள்
கொவிட் தொற்றுக்கான மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமராட்சி மீனவர்கள், தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.