Header image alt text

இன்று (29) நள்ளிரவு முதல் மேலதிக நேர சேவையை கைவிடவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டணத்தை தன்னிச்சையாக திருத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக அதன் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். Read more

பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுன கட்டாயமாக வெற்றிப்பெறும். ரணில் மற்றும் சஜித்துடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகள் எதுவுமே என்னிடத்தில் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more

கழகத்தின் இராணுவப் பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட தோழர் காத்தான் (கிருஷ்ணசாமி கிருஷ்ணகுமார்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.  கழகத்தின் இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த தோழர் சுந்தரத்தின் மறைவுக்குப் பின்னர் கழக இராணுவப் பொறுப்பாளராக பொறுப்பேற்று செயற்பட்டார். Read more

இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்றுபகல் 1 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் மெய்நிகர் வழியாக திறந்து வைக்கப்பட்டது. Read more

குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். Read more

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 1 பில்லியன் டொலர்களை இந்தியாவிடம் கோரியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை இரண்டு தரப்பினரும் இன்று (28) உறுதிப்படுத்தியுள்ளதாகவும்  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

தோழர் ஸ்கந்தா அவர்களின் அன்புத் தந்தையார் அமரர் கந்தர் இளையதம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக கிளாலியில் உள்ள முன்பள்ளிக்கு தோழர் சின்னவன் அவர்களின் தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. Read more

நீர்த்தேக்கங்களில் உள்ள நீரைக் கொண்டு இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடும் வரட்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28 சதவீதத்தை விடக் குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன. Read more

ஓமான் அரசாங்கத்தால் இலங்கைக்கு கடனுதவியாக வழங்கப்பட்ட 3,500 மெற்றிக் தொன் எரிவாயு, இன்று (27) பிற்பகல் கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்டதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். லிட்ரோ நிறுவனத்திடம் போதியளவு எரிவாயு கையிருப்பு இருப்பதால், நாளொன்றுக்கு 100,000 சிலிண்டர்கள் வீதம் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more