இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் அனுமதி கோரி, அரசினர் தீர்மானத்தை முதல்வர் பேரவையில் முன் வைத்து பேசினார். இந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. Read more
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் திரு தர்மலிங்கம் யோகராஜா அவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு. பீ.ஏ.சரத்சந்திர அவர்களை அண்மையில் இரண்டு தடவைகள் நேரில் சந்தித்து மக்களுக்கு சீரான மண்ணெண்ணெய் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்.
27.04.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர்கள் சேகர் (முருகேசு வடிவேல் – திருவையாறு), ரவி (கிளைமண்ட் எதிர்மன்னசிங்கம் – குருநகர்) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் சடலத்தை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறிவதற்கு, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், அம்பாறை புத்தங்கல பொது மயானத்திலிருந்து, இன்று (27) தோண்டி எடுக்கப்பட்டன.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்ய விரும்பாததற்கு எதிராக 1,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
உள்ளூர் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung வட மாகாண வணிக சமூகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இன்றுகாலை 9.30மணியளவில் இடம்பெற்றது.
26.04.1977இல் அமரத்துவமடைந்த தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்றிரவு சந்தித்தார்.