கொழும்பு ஓல்கொட் மாவத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே, இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more
பொதுமக்களால் நாளை (09) நடத்தப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் பதவி விலகல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கையொன்றை வெளியிட்டு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
வன்முறை தீர்வல்ல” என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க துாதுவர் ஜூலி சங், போராட்டம் நடத்துபவர்கள், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள்“ என்று கோரிக்கை விடுத்துள்ளார். ட்விட்டரில் பதிவொன்றை இட்டு அவர் இந்த கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் போராட்டத்தை ஆரம்பித்தனர். களனி பல்கலைக்கழகத்துக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி கொழும்பு கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.
மின் கட்டணங்களை வழங்குவதில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த, முன் அச்சிடப்பட்ட கட்டண பட்டியலை வழங்கும் முறைக்குப் பதிலாக, புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜஸீன் பின் ஜாபர் ஜஸீம் அல் சரூர் நேற்று (07) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.