தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) லண்டன் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது லண்டன் கிளையின் இணைப்பாளர் தோழர் பாலா தலைமையில் தோழர் நேதாஜி (பிரேம்சங்கர்) அவர்கள் தொகுத்து வழங்க புளொட் செயலதிபர் தோழர்.கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்களின் சகோதரர் கதிர்காமர் ஞானேஸ்வரன் அவர்கள் தீபச்சுடரை ஏற்றி வைக்க 16.07.2022 சனிக்கிழமை லண்டன் கே.எஸ்.ஜி சிற்றுண்டிச்சாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் புளொட் லண்டன் கிளையின் தோழர்களான அல்வின், சுகந்தன், முகுந்தன், நிரோஷன் உட்பட கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி நிகழ்வில் ரெலோ இயக்க லண்டன் கிளையின் உபதலைவர் தோழர் ரூபன் அவர்களும் அவரது நண்பரும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி புளொட் லண்டன் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வுக்கான மண்டப ஒழுங்கையும், வடிவமைப்பையும் லண்டன் கிளைத் தோழர் நிரோஷன் தலைமையிலான அவரது நண்பர்கள் சிறப்பாக மேற்கொண்டு இருந்தனர்.

மேற்படி வீரமக்கள் தின நிகழ்வில் தோழர்.நேதாஜி அவர்களும் கவிதை ஒன்றை வாசித்தளித்தார்.

கவிதை

எத்தனை தடவைதான் சாவது…எம்மண்ணில் …..
எத்தனை தடவைதான் சாவது எம்மண்ணில்….

எத்தகர் எம்மை அழித்த போதும்
அத்தகை துணிவாய் உயிர்த்த தோழர்களே….
உங்கள் நினைவில்…
எத்தனை தடவைதான் சாவது எம்மண்ணில்….

கொள்கை கொண்டு கழக நன்மை கொண்டு…
எதிரில் எதிரி கண்டும் அஞ்சா நெஞ்சம்
கொண்டு…போரிட்ட வீரர்களே….
உங்கள் வீரம் நினைத்து…
எத்தனை தடவைதான் சாவது எம்மண்ணில்….

வெல்லும் மக்கள் புரட்சி என்றும்
கொள்கை சாகா தினமும் போரிட்டு..
மண்ணில் சரிந்த மக்களே…
உங்கள் தியாகம் எண்ணி….
எத்தனை தடவைதான் சாவது எம்மண்ணில்…

உற்றவர் உறவினர் கற்றவர் மற்றவர்
நின்றவர் எழுந்தவர்…
பிஞ்சுகள் குஞ்சுகள் அனைவரும்
மாண்டனரே!!!
எமக்காய் வீழ்ந்தனரே…
அவர்கள் உயிர்களை யோசித்து…
எத்தனை தடவைதான் சாவது எம்மண்ணில்!

திட்டித்தீர்த்த உலகம் தெளியா நின்ற
அயல் நாட்டவர்…
வேடிக்கை பார்த்த சொந்த இனம்
அனைத்தும் கண்டும்….
கலங்கா சென்ற மாண்ட தோழனே..
எத்தனை தடவைதான் சாவது எம்மண்ணில்….

மற்றவர் மகிழ பிறர் வாழ தம்முயிர் தந்து…
மண்ணோடு மண்ணாய்…
மடிந்த தோழர்களே….
உண்மை உங்கள் நினைவில்..
எத்தனை தடவைதான் சாவது எம்மண்ணில்….!

நெருப்பில் வீழ்வோம்… துமுக்கியால்
மாள்வோம்… நாட்டைக் காப்போம்..
இனத்தை வெல்வோம் என
முழக்கம் செய்த தோழரை நினைத்து..
எத்தனை தடவைதான் சாவது எம்மண்ணில்!

வென்றவர் தோற்றவர் வேற்றுமை கண்டவர்…
வந்தவர் சென்றவர் அனைவரும் வாழ
வழி செய்து சென்ற….
தோழர்களே … விழிமூடித்தூங்க
உங்களின் நினைவுகளில் எத்தனை தடவைதான்
சாவது எம்மண்ணில்!