வவுனியா சிதம்பரபுரம் இளந்தளிர் முன்பள்ளிக் கட்டிட திறப்பு விழாவும், விளையட்டு விழாவும் நேற்று(23.07.2022) சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் அவர்கள் கலந்துகொண்டு முன்பள்ளிக்கான கட்டிடத்தை வைபவ ரீதியாக திறந்துவைத்தார். Read more

எதிர்வரும் நாட்களில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்துவதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உட்பட மேலும் சில விடயங்கள் காட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாணவர்கள், பாடசாலைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார். ஒரே இரவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை சந்தித்ததாக ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.