தமிழர் விடுதலைகூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான கலாநிதி நீலன் திருச்செல்வன் அவர்களின் நினைவுதின நிகழ்வு நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் யாழ். மூளாய் சுழிபுரத்தில் அமைந்துள்ள அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையில் இடம்பெற்றது.

இதன் பொழுது கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் திருவுருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஈகை சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், எமது கட்சியினுடைய யாழ் மாவட்ட இணைப்பாளரும், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.கௌதமன், அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தங்கமுகுந்தன், கௌரிகாந்தன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.