Header image alt text

காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்வாகத்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் மீறப்படுகின்றன” என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, அப்பதவிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலைணில், புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

18 அமைச்சர்களின் விபரம்… Read more

கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன்போது 8 பேர் காயமடைந்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (22) காலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read more

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, திரெளபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். தவிர, ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். Read more

புதிய பிரதமராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நாளை ( 22) காலை பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாட்டிற்கு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 19 ஆண்களும் 09 பெண்களும் 05 சிறார்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர். Read more