நாடளாவிய ரீதியில் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் நேற்று (31) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, இன்று (01) முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் QR முறை மற்றும் கோட்டாவின் கீழ் மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

நேற்று பிற்பகல் நிலவரப்படி, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக சுமார் 5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டில் உள்ள மொத்த எரிபொருள் நிலையங்களில் 95 வீதமானவை QR முறையை பின்பற்றியுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

QR முறையைப் பின்பற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருள் இருப்புகளிலிருந்து QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கப்படுவது குறித்து கண்காணிக்கப்பட்டு எதிர்காலத்தில் விநியோகம் இடம்பெறும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜெனரேட்டர்கள், தோட்ட உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருள் வகை, வாராந்திர எரிபொருள் தேவை மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்ட பிராந்திய செயலகங்களில் பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட கோட்டா வழங்கப்படும். மேலும் அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத எரிபொருளை சேமித்தல், விற்பனை செய்தல் அல்லது எரிபொருள் விநியோக அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத எரிபொருள் நிலையங்கள் பற்றிய புகைப்படம் அல்லது காணொளி ஆதாரங்களை 074 21 23 123 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, QR முறையை நடைமுறைப்படுத்துவதில் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பை வழங்குமாறு பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.ஞஞ