ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் திருகோணமலை மாவட்ட நிர்வாகக் கூட்டம் கட்சியின் 10ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட அமைப்பாளர் தோழர் மதியழகன் அவர்களின் தலைமையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் அவர்களின் இல்லத்தில் (21/08/2022) மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. Read more
22.08.2006இல் திருகோணமலையில் மரணித்த தோழர் குமார் (முத்துலிங்கம் பாலச்சந்திரன்- திருமலை) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. உயர்ஸ்தானிகராலயம், இன்று (22) வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு கவலை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய தகவல்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு வகையிலும் தேர்தல் நடத்தப்பட்டால், இந்நாட்டில் கிட்டத்தட்ட 3 இலட்சம் மக்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, ஒக்டோபர் 31 ஆம் திகதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.