பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கல்விசாரா ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினர் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. Read more
மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. உடனடியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்திற்கு உள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் பி. விதானகே குறிப்பிட்டார். எனினும், அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி எதிர்வரும் 14 ஆம் திகதி அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பில் 08.03.2005இல் மரணித்த தோழர் வெஸ்லி (அழகையா கிருபேஸ்வரன் – கடுக்காமுனை) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில், இந்த திகதிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது நேற்று (07) நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் 04 சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தினால் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பகல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்புப் பொதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
நீண்டகாலமாக, புளொட் அமைப்பின் தலைமை பற்றியும் ஏனைய கழக உறுப்பினர்கள் பற்றியும் முகப்புத்தக தளத்தில் பொய்யான, கேவலமான பதிவுகளை வெளிப்படுத்தி வரும் ‘ரகு பரன்’ எனும் பெயரிலான பக்கத்தின் நிர்வாகிக்கும் புளொட் அமைப்புக்கும் எதுவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதை அறியத் தருகிறோம்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
வவுனியாவில் வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. வவுனியா குட்ஷெட் வீதியின் உள்ளக வீதியிலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன 09 மற்றும் 03 வயதான சிறுமிகள் இருவர், அவர்களின் பெற்றோர் ஆகியோரது சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் நண்பர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.