Header image alt text

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட  பிரேரணை, சட்டமூலமாக  வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ளடகப்பட்டுள்ள சில சரத்துகளை திருத்துவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. Read more

34வது வீரமக்கள் தினம்..

Posted by plotenewseditor on 27 June 2023
Posted in செய்திகள் 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம்  15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஜனவரி 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து  காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. Read more

இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டம் (Sri Lanka Unique Digital Identity Project – SL-UDI) நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற போதே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. Read more

இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாகும். ”அவர்கள் அனைவரும் மனிதர்கள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இம்முறை அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் 15 முதல் 64 வயதுக்குட்பட்ட 284 மில்லியன் மக்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகளில் 26 வீத அதிகரிப்பாகும். Read more

இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கை வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் நேற்று(25) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சீன வௌியுறவு அமைச்சர் Qin Gang இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு இயலுமான வகையில் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக சீன வௌியுறவு அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார். Read more

இந்தியாவின் உதவியால் இலங்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற அமைதி மாநாட்டில் பங்கேற்ற விஜயதாச ராஜபக்ஷ செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். Read more

ஸ்ரீலங்கன் விமான சேவையின் 70க்கும் மேற்பட்ட விமானிகள், போதிய வேதனம் இன்மையினால் ஏற்கனவே பணியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைப் பணியாளர்கள் குழுவொன்று விமானம் தாமதமானதால் அந்த வாய்ப்பை இழந்த சம்பவம் தொடர்பில் அந்த சங்கத்தினர் அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளனர். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) புனரமைக்கப்பட்ட வவுனியா மாவட்ட அலுவலகம் இன்று (25,06,2023) பிற்பகல் 12.00 மணியளவில் கட்சியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், நிர்வாக செயலாளர் தோழர் பற்றிக், நினைவில்ல பொறுப்பாளர் தோழர் விசுபாரதி, மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி, மத்தியகுழு உறுப்பினர் தோழர் சிவம், தோழர்கள் கொன்சால், சிவா, சுஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

இலங்கையின் கடன் வழங்குநர்கள்இ உரிய காலத்தில் கடனை மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இலங்கையில் அங்கீகாரம் வழங்கப்பட்டமை மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கான சக்திமிக்க உள்ளுர் உரித்துடைமை குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். Read more