இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற ‘புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்’ தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more
23.06.1994இல் மரணித்த தோழர் புஷ்பன் (சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்- ஆயித்தியமலை) அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்யும் யோசனை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர கூறுகின்றார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பான யோசனைகளை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான யோசனை பாராளுமன்ற தெரிவுக் குழுக்களினூடாக முன்வைக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவிக்கின்றார்.
ரசாங்கத்தின் நலன்புரி திட்டத்திற்கு பயனாளர்கள் தெரிவு செய்யப்படுவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக பயனாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். அரசாங்கத்தின் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் பயன் பெறும் பயனாளர்கள் பற்றிய ஆவணங்கள் தற்போது வௌிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை காலமும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்று வந்த பயனாளர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. ஸ்திரமற்ற பொருளாதார நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 04 பிரிவுகளின் கீழ் அரசாங்கத்தின் நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் வௌியிடப்பட்டிருந்தன.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் பாரிஸில் நடத்துகின்ற சர்வதேச நிதி மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள், சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கும் தென் கொரியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். கொரிய விமான நிறுவனத்தினால் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதை பிற்போடுவதற்கு ஆளுங்கட்சி இன்று தீர்மானித்தது. இன்று பாராளுமன்றத்தில் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளமையினால், வாக்கெடுப்பு இடம்பெறும் தினம் தொடர்பில் நாளை (22) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானம் எடுப்பதாக சபை முதல்வர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்டை (Patricia Scotland) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, பொதுநலவாய அமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல்மயமாக்கல் செயற்றிட்டம் தொடர்பில் அமைப்பின் செயலாளர் நாயகம் – ஜனாதிபதி இடையே கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சில பிரேரணைகளை கவலையளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் (Volker Turk) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.